ஜிமிக்கி கம்மல விடுங்க பாஸ்.. மலையாளத்தில் பாடும் டோணியின் மகளை பாருங்க!
டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் டோணியின் மகள் மலையாளத்தில் பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. மலையாளத்தில் "அம்பலப்புழா" என்ற பாடலை அழகான உச்சரிப்பில் டோணியின் மகள் ஷிவா பாடும் இந்த வீடியோ இந்தியா முழுக்க டிரெண்ட் ஆகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர் டோணி எந்த அளவுக்கு பிரபலமோ அதே அளவுக்கு டோணியின் மகள் ஷிவாவும் பிரபலம். செல்லமாக வீடியோ குயின் என்று அழைக்கப்படும் இவரின் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் அடிக்கடி வெளியாகி வைரல் ஆகும். ஷிவா நடக்க ஆரம்பிப்பதற்கு முன்பே இணையத்தில் வைரல் ஆனவர்.

முதலில் ஷிவாவும், டோணியும் ஒன்றாக தரையில் மண்டியிட்டு செல்லும் வீடியோ வெளியானது. அதன்பின் அவர் கோஹ்லியுடன் உரையாடும் வீடியோவும் வெளியானது. ஷிவா கோஹ்லியின் செல்லப்பிள்ளை ஆவார். அதன்பின் டோணியும், ஷிவாவும் ஒன்றாக சாப்பிடும் வீடியோ வைரல் ஆனது. கடைசியாக டோணிக்கு செலிப்ரிட்டி கால்பந்து போட்டியில் ஷிவா தண்ணீர் கொடுக்கும் படங்கள் வைரல் ஆனது. தற்போது புதிதாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில் ஷிவா பழைய மலையாள பாடல் ஒன்றை பாடுகிறார். மிகவும் அழகான உச்சரிப்பில் கஷ்டமான அந்தப் பாடலை பாடும் வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது. இந்த பழைய பாடலை மலையாளிகளிலேயே பாதி பேர் மறந்து இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஷிவா இந்த பாடலை பாடியுள்ளதால் மீண்டும் பலர் அந்த பாடலை தேடி கேட்டு வருகின்றனர். இந்த பாடல் பிரபல நடிகர் ஜெயராமன் நடித்த 'துளசி தீர்த்தம்' என்ற படத்தில் இடம்பெற்ற பாடலாகும்.


Click it and Unblock the Notifications