Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எழுந்து வா தல.. இதுக்கெல்லாம் கலங்கிப் போய் உட்கார்ந்தா எப்படி!

டெல்லி: கூல் கேப்டன் என்று பெயர் பெற்றவர் டோணி. அதிகம் பேசாதவர். உத்திகள் வகுப்பதில் நம்பர் 1. அப்படிப்பட்டவர் இடிந்து போய் உட்கார்ந்திருப்பதை பார்த்துள்ளீர்களா. அந்தக் காட்சியைக் கண்டு ரசிகர்கள் பெரும் வேதனையுற்றுள்ளனர்.

இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான 4வது ஒரு நாள் போட்டி டோணிக்கு மறக்க முடியாத போட்டியாக மாறி விட்டது. அதிக பந்துகளைச் சாப்பிட்டு அரைசதம் போட்டு அவப் பெயரை பெற்றார் டோணி. இந்திய வீரர்களிலேயே மிகவும் மெதுவாக அரை சதம் போட்ட 2வது வீரராக டோணி இப்போட்டியில் மாறினார் (முதல்வர் சடகோபன் ரமேஷ்).

இப்போட்டியில் இந்தியா மயிரிழையில் தோற்றது. போட்டி முடிவின்போது பெவிலியனில் டோணி இறுகிய முகத்துடன் அமைதியாக உட்கார்ந்திருந்த காட்சி ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

டோணியை யாரும் இப்படி பார்த்ததே இல்லை. ஆனால் அந்தப் போட்டியில் தன்னால் இந்தியா தோற்று விட்டதே என்று ஷாக்கிலும், விரக்தியிலும் எதுவும் பேசாமல் இடிந்து போய் டோணி உட்கார்ந்திருந்த காட்சி உண்மையிலேயே மனதுக்கு வலியைத் தரும் வகையில் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

எழுந்து வா தல, நமக்காக காத்திருக்கு நிறைய வேலை!

Story first published: Friday, July 7, 2017, 10:07 [IST]
Other articles published on Jul 7, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+