For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி போட்ட திட்டம் மண்ணைக் கவ்வியதால்தான் போட்டி “டை” ஆனது.. போட்டு உடைத்த குல்தீப்

Recommended Video

போட்டி டை ஆன விவகாரம். உண்மையை போட்டு உடைத்த குல்தீப்- வீடியோ

விசாகப்பட்டினம் : இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி "டை"யில் முடிந்தது.

கடைசி ஓவர் வரை நீண்ட இந்த போட்டியில், உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரில் 14 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 13 ரன்கள் குவித்து போட்டியை டை செய்தது.

குறிப்பாக, கடைசி பந்தில் ஐந்து ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷாய் ஹோப் பவுண்டரி அடித்து போட்டி டை ஆக முக்கிய காரணமாக விளங்கினார்.

குல்தீப் பேட்டியில் சொன்ன உண்மை

குல்தீப் பேட்டியில் சொன்ன உண்மை

போட்டி முடிந்த உடன் குல்தீப் யாதவ் பேட்டி அளித்தார். அவரிடம், கடைசி பந்தில் இந்திய அணி பீல்டிங்கை மாற்றியது ஏன்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த குல்தீப் தோனி தான் அந்த பீல்டிங் மாற்றத்தை செய்தார் என உண்மையை போட்டு உடைத்தார். அந்த கடைசி பந்து தான் இந்தியாவின் வெற்றியை டை-ஆக மாற்றியது. கடைசி பந்தை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹோப், தனக்கு அந்த கடைசி பந்து எங்கே வரும் என முன்பே தெரியும் என போட்டி முடிந்த உடன் கூறி இருந்தார்.

தோனி தான் மாற்றினார்

தோனி தான் மாற்றினார்

குல்தீப் அந்த கடைசி பந்து பீல்டிங் மாற்றத்தை பற்றி மேலும் கூறுகையில், "நான் இதை பற்றி எல்லாம் தெரிந்து கொள்ளும் அளவுக்கு பெரியவன் இல்லை. நான் 30 போட்டிகள் தான் ஆடி உள்ளேன். தோனி 300 போட்டிகள் ஆடி இருக்கிறார். அவருக்கு எங்களை விட அதிக அனுபவம் உள்ளது. அந்த நேரத்தில் அவர் அதை யோசித்து செயல்படுத்தினார்" என கூறினார்.

என்ன மாற்றம் செய்தார் தோனி?

என்ன மாற்றம் செய்தார் தோனி?

உமேஷ் யாதவ் வீசிய அந்த கடைசி ஓவரில் முதல் ஐந்து பந்துகள் விக்கெட்டுக்கு நெருக்கமான யார்க்கர் பந்துகளாக வீசப்பட்டன. ஆனால், கடைசி பந்துக்கு திட்டம் போட்ட தோனி "தேர்ட் மேன்" இடத்தில் இருந்த பீல்டரை உள்பக்கம் மாற்றினார். உமேஷை அகலமான யார்க்காரக வீசுமாறு கூறி இருக்கிறார். இந்த திட்டங்களை யூகித்த ஷாய் ஹோப், பந்தை சந்திக்க முன்பே தயாராகி, பவுண்டரி அடித்து விட்டார்.

அடி சறுக்கிய தோனி

அடி சறுக்கிய தோனி

தோனி இந்த போட்டியில் பேட்டிங்கிலும் சொதப்பினார். இந்த போட்டியில் வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல அனுபவம் வாய்ந்த தோனிக்கும் அடி சறுக்கி, அவர் போட்ட கடைசி பந்து திட்டம் சொதப்பியுள்ளது. நல்ல வேளையாக ஷாய் ஹோப் அணி கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்கவில்லை என சொல்லி மனதை தேற்றிக் கொள்ளவேண்டியது தான்.

Story first published: Friday, October 26, 2018, 14:48 [IST]
Other articles published on Oct 26, 2018
English summary
Dhoni’s plan for last ball failed in the west Indies tie match
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+