சென்னையில் விளையாட வேண்டாம்.. டோணிக்கு கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்

Posted By:
சென்னையில் விளையாட வேண்டாம் ... தோனிக்கு கோரிக்கை வைக்கும் ரசிகர்கள் ...

சென்னை: சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட கூடாது என்று சென்னை அணியின் கேப்டன் டோணிக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.

தற்போது காவிரி போராட்டம் காரணமாக ஐபிஎல் போட்டிக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. காவிரி போராட்டத்தை ஐபிஎல் போட்டி திசை திருப்பிவிடும் என்று போராட்டம் செய்யும் மக்கள் கூறிவருகிறார்கள்.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டியை கண்டிப்பாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த கூடாது என்று அவர்கள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். அதே போல் சென்னை அணி வீரர்களையும் போட்டியில் கலந்து கொள்ள கூடாது என்று கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.

கருப்பு ஆடை

இவர் ''சென்னைல ஐபிஎல் பார்க்க போறவங்க எல்லாம் கருப்பு சட்டை அணிந்து ஸ்டேடியத்தில் தோனி சூப்பர் கோலி சூப்பர்ன்னு எழுதாம, எல்லாருமே காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் எழுதி ஸ்கிரீன்ல காட்டுங்க நீங்க செய்யுற இந்த செயலை ஒட்டு மொத்த இந்தியாவும் பார்க்கும். கண்டிப்பாக ஏதாவது பயன் கிடைக்கும் நண்பர்களே'' என்றுள்ளார்.

காவிரி அத்தியாவசியம்

நாளுக்கு நாள் ஐபிஎல் போட்டிக்கு எதிராக குரல் அதிகமாகி வருகிறது. இவர் ''ஐபிஎல் ஆடம்பரம், காவிரி அத்தியாவசியம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

காவிரி தேவை

இவர் ''ஐபிஎல் தேவை இல்லை, காவிரி நீர் மட்டுமே தேவை'' என்று காவிரி போராட்டத்திற்காக குரல் கொடுத்துள்ளார்.

இப்போ ஐபிஎல் வேணாம்

இவர் ''தோனி பிடிக்கும், ஆனால் காவிரி வேணும்!, சென்னை பிடிக்கும் !, ஆனால் தமிழ்நாடு வேணும்!, கிரிக்கெட்டும் விளையாடுவோம் !, உரிமைக்காக விடாம போராடுவோம்!, அதனால இப்போ ஐபிஎல் வேணாம்! சோறு போட காவிரி வேணும்! காவிரி வரட்டும்! பிறகு ஐபிஎல் வரட்டும்!'' என்றுள்ளார் .

டோணிக்கு கோரிக்கை

இவர் '' ஹலோ டோணி, நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிக்காக நீங்கள் மிகவும் எதிர்பார்ப்போடு இருப்பீர்கள். ஆனால் தமிழக விவசாயிகள் தினமும் காவிரி நீருக்காக மரணம் அடைந்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் தயசு செய்து சென்னையில் விளையாடாமல், சென்னை மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று கோரிக்கை வைத்து இருக்கிறார்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
People protesting against IPL match due to Cauvery issue. So a huge confusion has raised that whether the will held or not. Dhoni should not play in Chennai stadium due to Cauvery issue say, protesters.
Story first published: Thursday, April 5, 2018, 16:17 [IST]
Other articles published on Apr 5, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற