Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MS Dhoni : இவரு ஒருத்தரால மட்டும் தான் இப்படி செய்ய முடியும்… இணையத்தில் வைரலாகும் வீடியோ

Recommended Video

IPL 2019: Chennai vs Punjab Dhoni bailes | ராகுல் அவுட் ஆகியிருந்தா சென்னை ஜெயிச்சுருக்க முடியுமா?

சென்னை:பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பார்க்காமலே தோனி செய்த ஸ்டெம்பிங் வீடியோ தான் நடப்பு ஐபிஎல் தொடரின் டாப் வைரல் வீடியோவாக மாறி இருக்கிறது.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. அந்த போட்டியில் ராகுலுக்கு தோனி செய்த அட்டகாச ரன் அவுட் தான் ரசிகர்களின் தற்போதைய ஹாட் டாக். ஆனால்.. பெய்ல்ஸ் கீழே விழாததால் அவுட் கொடுக்கப்படவில்லை.

அதாவது... நேற்றைய போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 2வதாக பஞ்சாப் அணி விளையாடியது. அப்போது பஞ்சாப் அணியின் வெற்றிக்காக கே.எல் ராகுல் கடுமையாக போராடினார்.

ரன் எடுக்க ஓடினார்

ரன் எடுக்க ஓடினார்

அவர் ஜடேஜாவின் ஒரு பந்தினை ஸ்வீப் செய்துவிட்டு ரன் எடுக்க ஓடினார். பந்தை துரத்திய தோனி ஸ்டம்பை பார்க்காமலே பின்னால் இருந்தே த்ரோ செய்து ஸ்டம்பில் அடித்தார்.

தோனியின் த்ரோ

பந்து சரியாக ஸ்டெம்ப் மேல் பட... விளக்கு எரிந்தது. ஆனால்... ஸ்டெம்பில் இருந்து பெய்ல்ஸ் விழாததால் அவுட்டிலிருந்து தப்பினார் ராகுல். தோனியின் இந்த த்ரோ தோனியின் ரசிகர்களால் அதிகஅளவு பகிரப்பட்டு வருகிறது.

ராகுலுக்கு அதிர்ஷ்டம்

ராகுலுக்கு அதிர்ஷ்டம்

பந்து ஸ்டெம்பில் படும் போது கிட்டத்தட்ட 2 அடி தூரம் ராகுலின் கிரீசுக்கும், பேட்டுக்கும் இடையே இருந்தது. அப்படி இருந்தும் ராகுல் அவுட்டாகவில்லை. அவருக்கு அதிர்ஷ்டமான நாள் என்று தான் சொல்ல வேண்டும்.

சென்னை வெற்றி

சென்னை வெற்றி

பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 160 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணி 138 ரன்கள் மட்டும் எடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Story first published: Sunday, April 7, 2019, 13:39 [IST]
Other articles published on Apr 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+