Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயிற்சிக்கு வராத டோணி.. பந்து வீசி 'டிரெய்னிங்' எடுத்த இஷாந்த். 5வது டெஸ்ட்டுக்கு ரெடியாகும் இந்தியா

லண்டன்: இந்தியா தனது கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டிக்குத் தயாராக ஆரம்பித்துள்ளது. இதற்கான வலைப் பயிற்சியில் இந்திய வீரர்கள் இறங்கியுள்ளனர்.

ஆனால் வலைப் பயிற்சிக்கு கேப்டன் டோணி வரவில்லை. அதேசமயம், ஒரே ஒரு போட்டியில் சோபித்து விட்டு காயத்துடன் காணாமல் போய் விட்ட இஷாந்த் சர்மா வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் கடைசிப் போட்டியில் ஆடுவார் என்பது உறுதியாகியுள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் 5வது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி 2 -1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்பது நினைவிருக்கலாம்.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 2வது போட்டியில் இந்தியா வென்றது. 3 மற்றும் 4வது போட்டியில் இங்கிலாந்து வென்று விட்டது. இப்போது கடைசிப் போட்டி டிராவில் முடிந்தால் கூட போதும் இங்கிலாந்து தொடரை வென்று விடும். மாறாக இந்தியா வென்றால் தொடர் சமனாகும். ஆனால் இந்தியாவால் இந்தத் தொடரை வெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இந்தியர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது.

டோணி ஆப்சென்ட்

டோணி ஆப்சென்ட்

இந்திய அணியின் வலைப் பயிற்சியின்போது டோணி இடம் பெறவில்லை. இது பல கேள்விகளை எழுப்பியது.

இஷாந்த் பிரசென்ட்

இஷாந்த் பிரசென்ட்

அதேசமயம், 2வது டெஸ்ட் போட்டியை இந்தியா வெல்ல முக்கியக் காரணமான வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா பயிற்சியில் ஈடுபட்டார். அவர் முழுமையாக காயத்திலிருந்து குணமாகியுள்ளார். இதனால் 5வது போட்டியில் அவரும் இடம் பெறுகிறார்.

உற்சாகப் பயிற்சி

உற்சாகப் பயிற்சி

அடுத்தடுத்து 2 தோல்விகளைச் சந்தித்துள்ள போதிலும் கூட இந்திய வீரர்கள் அதைப் பொருட்படுத்தாமல் கடைசிப் போட்டியில் வெற்றியைப் பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் உற்சாகமாக பயிற்சியில் ஈடுபட்டதைக் காண முடிந்தது.

நாளை தொடக்கம்

நாளை தொடக்கம்

நாளை 5வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. எப்படி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் அபாரமாக இந்தியா வென்றதோ அதே போல இதே லண்டனின் ஓவல் மைதானத்திலும் இந்தியா வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

ஓய்வெடுக்கிறார் டோணி

ஓய்வெடுக்கிறார் டோணி

டோணி வராதது குறித்து அணி நிர்வாகம் தரப்பில் கூறுகையில் டோணிக்கு காயம் ஏதும் இல்லை. அவர் நலமாகத்தான் இருக்கிறார். தனது குடும்பத்துடன் சற்று ஓய்வாக இருக்கிறார், அவ்வளவுதான் என்று விளக்கப்பட்டது.

டங்கன் - கோஹ்லி

டங்கன் - கோஹ்லி

டோணி இல்லாததால், பயிற்சியாளர் டங்கன் பிளட்சர், துணை கேப்டன் விராத் கோஹ்லி ஆகியோர் அணியின் பயிற்சியை மேற்பார்வை பார்த்தனர்.

Story first published: Thursday, August 14, 2014, 12:40 [IST]
Other articles published on Aug 14, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+