புனே: புனேவில் மனநலம் குன்றிய சிறப்புக் குழந்தைகளுடன் தன்னுடைய நேரத்தினை செலவிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரில் ஏற்பட்ட தோல்வியினால் ஏற்பட்ட மனச்சோர்வை போக்கிக்கொள்ளும் விதமாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நடத்திய கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோணி அவர்களுக்கு பரிசுகளை அளித்து மகிழ்வித்தார்.

பிரபல தொழிலதிபர் பிரகாஷ் சாப்ரியா நடத்தி வரும் முகுல் மாதவ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் மாற்றுத்திறனாளி, மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கலாச்சார கலைநிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற டோணி, அங்கிருந்த குழந்தைகளுடன் சுமார் ஒருமணி நேரம் பேசி மகிழ்ந்தார். பின்னர், அவர்களுக்கு பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்தினார்.