Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோடிக்கணக்கான இந்தியர்களைப் புன்னகைக்க வைத்த மன்னன் நீ.. டோணிக்கு "டோணி" புகழாரம் #dhoni

சென்னை: கூப் கேப்டன் டோணி கேப்டன் பதவியிலிருந்து விடை பெற்று விட்டார். வீரராக அவர் ஒரு நாள் மற்றும் டுவென்டி 20 போட்டிகளில் தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் டோணியின் மாஜிக் கேப்டன்சியை ரசிக்க முடியாது என்ற சோகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

டோணிக்கு கிரிக்கெட் உலகிலிருந்தும், திரையுலகிலிருந்தும், அரசியல் தலைவர்களிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் புகழாரங்கள் குவிந்து கொண்டுள்ளன.

'Dhoni' take a bow to his captain!

இந்த நிலையில் டோணி குறித்து நெகிழ்ச்சியுடன் சிலாகித்துள்ளார் டோணியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் டோணி வேடத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

டோணி - தி அன் டோல்ட் ஸ்டோரி என்ற படம் டோணியின் வாழ்க்கைக் கதையாகும். பெரும் வெற்றி பெற்று ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்த இப்படத்தில் டோணியாக அசத்தியிருந்தார் ராஜ்புத். டோணியின் ஓய்வு முடிவு இவரையும் சோகத்துக்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து அவர் விடுத்துள்ள டிவீட்டில், உங்களைப் போல யாரும் இல்லை. கோடிக்கணக்கான புன்னகைகளுக்குக் காரணமானவர் நீங்கள். என் கேப்டனுக்கு தலை வணங்குகிறேன் என்று கூறி நெகிழ்ந்துள்ளார்.

டிவிட்டரிலும், பேஸ்புக் உள்ளிட்ட பிற சமூக வலைதளங்களிலும் டோணி குறித்த பதிவுகள் அலை அலையாய் குவிந்து கொண்டுள்ளன.

Story first published: Thursday, January 5, 2017, 10:38 [IST]
Other articles published on Jan 5, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+