டோணியின் இந்த ஒரு மெத்தனத்தால் தோற்றதா புனே? புலம்பும் ரசிகர்கள்
டெல்லி: மெத்தனம் எந்த பெரிய வீரரையும் சாய்த்துவிடும் என்பதற்கு டோணியின் நேற்றைய ரன்அவுட் சிறந்த உதாரணம்.
டெல்லியில் நேற்று நடந்த லீக் போட்டியில், புனே, டெல்லி அணிகள் மோதின. இதில் 'டாஸ்' வென்ற டெல்லி அணி கேப்டன் ஜாகிர் கான், முதலில் 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
டெல்லி அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவை என்ற நிலையில் திவாரி 2 சிக்சர்களை விளாசியும் கூட, புனே அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

திருப்புமுனை
இதில் ஆட்டத்தின் முக்கிய நேரத்தில் புனே வீரர் டோணியை, டெல்லி வீரரான வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ரன் அவுட்டாக்கியது மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது.

நல்ல அவகாசம்
டோணி களத்தில் நின்றபோது வழக்கமாக அவர் ஆடுவதை போல ஆடினாலே வெற்றி கனியை தட்டிவிடலாம் என்ற நிலைதான் இருந்தது. ஆனால் அவர் ரன் அவுட்டானது ஆட்டத்தை திருப்பியது.

ரன்அவுட்டானதை யாரும் பார்த்தவர் சொற்பம்
எப்போதும் ரன்கள் ஓடுவதில் துரிதமாக செயல்படுபவர் டோணி. அவர் ரன்அவுட் ஆனதை பார்த்த ரசிகர்கள் சொற்பத்திலும், சொற்பமாகத்தான் இருப்பர். மின்னல் வேகத்தில் ஓடக்கூடியவர்.

டோணி தப்பு கணக்கு
ஆனால் நேற்றைய ஆட்டத்தில் பந்தை லெக் திசையில் தட்டிவிட்டுவிட்டு மெதுவாக ஓட்டத்தை தொடங்கினார். அதுதான் அவரது அவுட்டுக்கு காரணமாக அமைந்தது. மறுமுனையில், திவாரி பேட்டிங் கிரீசை நோக்கி ஓடியபடி இருந்ததால், ஃபீல்டர் அந்த ஸ்டெம்பை நோக்கிதான் பந்தை எறிவார் என தப்பாக கணிக்கிட்டு மெதுவாக ஓடத்தொடங்கினார் டோணி.
மெத்தனம்
ஆனால் பந்தை ஷமி எடுத்து பவுலர் முனை ஸ்டெம்பை உற்று நோக்கியதும்தான் விபரீதத்தை உணர்ந்து விரைந்து ஓடத்தொடங்கினார் டோணி. ஆனால் ஷமி மிக துல்லியமாக ஸ்டம்பை நேரடியாக அடித்தார். இதனால் சிறு இடைவெளியில் டோணி ரன்அவுட்டானார்.


Click it and Unblock the Notifications