Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓகே சொன்ன ஐபிஎல் நிர்வாகம்... சி.எஸ்.கேவுக்கு மீண்டும் திரும்பும் டோணி... விசில் போடு!

டெல்லி: சூதாட்ட புகார் காரணமாக விளையாடாமல் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதான தடை சில மாதங்களுக்கு முன் நீக்கப்பட்டது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2018ல் நடக்கும் ஐபிஎல் போட்டியில் மீண்டும் விளையாடும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் 2018ல் நடக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக மீண்டும் டோணி விளையாடுவாரா என சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. டோணி சென்னை சூப்பர் கிங்ஸ் உடையில் இருக்கும் போட்டோவும் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டோணி மீண்டும் சென்னை அணிக்காக விளையாடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில தினங்களில் அவர் அணியில் இணைவது குறித்த தகவல் வெளியாகும் எனப்படுகிறது.

 சென்னைக்கு சூப்பர் கிங்ஸ்சுக்கு தடை

சென்னைக்கு சூப்பர் கிங்ஸ்சுக்கு தடை

ஒருகாலத்தில் பல கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேவரைட் அணியாக இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இரண்டு முறை ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை அணிக்கு இந்தியாவில் மட்டும் இல்லாமல் மற்ற நாடுகளிலும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். 2013ல் நடந்த ஐபிஎல்லில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சிஎஸ்கே அணிக்கு 2015ல் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து 2017 ஐபிஎல் வரை சிஎஸ்கே அணியால் ஐபிஎல் விளையாட முடியாமல் போனது.

 புதிதாக உருவான அணிகள்

புதிதாக உருவான அணிகள்

இதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சென்னை அணியுடன் சேர்ந்து தடை வாங்கியது. இதையடுத்து இந்த இரண்டு அணிகளின் இழப்பை ஈடுகட்டும் வகையில் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் லைனஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றன. புனே அணிக்கு முதல் தொடரில் டோணி கேப்டனாக இருந்தார். ஆனால் அதற்கு அடுத்த தொடரில் ஆஸ்திரேலியாவின் ஸ்டிவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் அந்த அணி நிர்வாகிகளால் டோணி அவமானப்படுத்தப்பட்டார் என்று கூறப்பட்டது.

 சிஎஸ்கே அணிக்கு தடை நீக்கம்

சிஎஸ்கே அணிக்கு தடை நீக்கம்

இந்த நிலையில் சிஎஸ்க்கே , ராஜஸ்தான் அணி மீதான தடை காலம் முடிவடைந்துள்ளது. இதையடுத்து இந்த இரண்டு அணிகள் மீதான தடை அகன்றுள்ளது. இந்த இரண்டு அணிகளும் 2018 ஐபிஎல் போட்டியில் மீண்டும் விளையாடும் என்று கடந்த ஜூலை மாதம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை அணிக்காக மீண்டும் டோணி விளையாடுவாரா எனற கேள்விகள் எழுந்தது.

 திரும்பி வரும் தல

திரும்பி வரும் தல

சிஎஸ்க்கே அணியில் டோணி இடம்பெறுவது குறித்து ஐபிஎல் சேர்மேன் ராஜிவ் சுக்லா கூறிய போது "கடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்காகவும், புனே அணிக்காகவும் விளையாடிய வீரர்கள் மீண்டும் அவர்கள் பழைய அணிக்கே செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. சென்னை அணிக்காக ரெய்னா, ஜடேஜா, அஸ்வின், டோணி ஆகியோர் ஆடுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இதுகுறித்த முறையான தகவல் விரைவில் தெரிவிக்கப்படும்'' என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.

Story first published: Tuesday, October 24, 2017, 18:12 [IST]
Other articles published on Oct 24, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+