Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆகஸ்ட் 15..! சுதந்திர தினத்தில் தோனியின் அந்த திட்டம்..! காத்திருக்கும் தல ரசிகர்கள்

Recommended Video

Dhoni in Army : ஆகஸ்ட் 15-ல் காஷ்மீரில் தோனி.. உற்சாகத்தில் ரசிகர்கள்- வீடியோ

மும்பை: சுதந்திர தின பேரணியில் தல தோனி பங்கேற்று, விழாவில் வீரர்களிடம் ராணுவ நடை செய்கிறார் என்ற தகவல் அவரது ரசிகர்களிடையே குஷியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன், தல தோனி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்கவில்லை. அந்த தொடரில் இருந்து விலகி இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற அனுமதி கேட்டிருந்தார். அதற்கான அனுமதியினை இந்திய ராணுவம் தோனிக்கு அளித்தது.

Dhoni will participate in august 15 independence day celebration patrol

அதனை தொடர்ந்து 2 மாத பயிற்சி காலத்தில் இணைந்து தோனி ஆகஸ்ட் 15ம் தேதி வரை இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து தோனி தனது பயிற்சியினை தொடங்கி இருக்கிறார்.

இந் நிலையில் தோனி இந்திய ராணுவத்துடன் இணைந்ததையும் காஷ்மீர் சென்று 106 ஆர்மி பட்டாலியனுடன் இணைந்து செயல்பட போவதையும் தோனியின் சக அதிகாரி ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆகஸ்ட் 15ல் நடைபெறும் சுதந்திர தின விழா பேரணியில் தோனி கலந்து கொள்கிறார்.

அந்த விழாவில் வீரர்களுடன், ராணுவ நடை செய்யவும் இருக்கிறார் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை கண்ட தோனி ரசிகர்கள் குஷியாகி இருக்கின்றனர். சுதந்திர தின நிகழ்ச்சியில் தோனி ராணுவ வீரர்களுடன் இணைந்து, கம்பீர ராணுவ நடையை பார்க்க ஆவலாக உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Story first published: Wednesday, July 31, 2019, 20:27 [IST]
Other articles published on Jul 31, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+