Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அது எப்படி எதுவுமே தெரியாமப் போச்சு டோணிக்கு...?

சென்னை: குருநாத் மெய்ய்பனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் காலத் தடை கூட ரசிகர்களை பாதிக்கவில்லை. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டுள்ள 2 ஆண்டு தடைதான் கிரிக்கெட் ரசிகர்களை சோகமாக்கி விட்டது. ஒரு வகையில் இந்தத் தடையானது கேப்டன் டோணிக்கும் கூட களங்கம்தான் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்.

அதேசமயம், டோணி தலைமீது தேவையில்லாமல் சில சந்தேக வளையங்கள் வந்து உட்கார்ந்துள்ளன. அவரது மகா அமைதிதான் இந்த சந்தேக வளையங்கள் உருவாக முக்கியக் காரணம்.

கிட்டத்தட்ட கடந்த 10 வருடமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக இருந்து வருகிறார் டோணி. குருநாத் மெய்யப்பனும் இதே காலகட்டத்தில் அணியுடன் இணைந்திருந்தார். அப்படி இருக்கையில் அனுபவம் வாய்ந்த டோணியால், எப்படி, மெய்யப்பனின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் வராமல் போனது என்பதுதான் பலருக்கும் ஆச்சரியமான விஷயமாக உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களின் புதிய கடவுள்

கிரிக்கெட் ரசிகர்களின் புதிய கடவுள்

சச்சின் மட்டுமே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் தெய்வமாக சோலோ பெர்பார்மென்ஸ் கொடுத்து வந்த நேரத்தில் தனது அபாரமான திறமை மூலம் அந்த இடத்தை மெல்லப் பிடித்தவர் டோணி. ரசிகர்களின் புதிய கடவுளாக மாறியவர் டோணி.

சாதனைகளின் நாயகன்

சாதனைகளின் நாயகன்

கபில்தேவுக்குப் பிறகு இந்தியர்களுக்கு சாதகமாக இல்லாமல் போன உலகக் கோப்பையை ஜஸ்ட் லைக் தட் பிடித்துக் கொண்டு வந்து அசத்திய நாயகன். அது மட்டுமா.. எத்தனை எத்தனை சாதனைகள். இப்போது இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் டோணிதான். இப்படிப்பட்ட பெருமை கொண்ட டோணி, இந்திய அணியை மட்டுமல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் தூக்கி நிறுத்தினார்.

சென்னையின் வரம்

சென்னையின் வரம்

கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குக் கிடைத்த வரம்தான் டோணி. அவரது தலைமையில் தொடர்ந்து இயங்கி வருகிறது. சாதனைகள் பல. கோப்பைகள் 2 முறை. எல்லாப் புகழும் டோணிக்கே போக வேண்டும். அவரது வழிநடத்தலுக்குகப் போக வேண்டும்.

ஆனால்..

ஆனால்..

ஆனால் தற்போது குருநாத் மெய்யப்பன் விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கும், டோணிக்கும் கூட களங்கம் வந்திரு்ப்பதை யாரும் மறக்க முடியாது. மறைக்கவும் முடியாது.

எதுவுமே தெரியாமல் போனது எப்படி

எதுவுமே தெரியாமல் போனது எப்படி

இத்தனை காலமாக குருநாத் மெய்யப்பன் இயங்கி வந்துள்ளார். அவரது நடவடிக்கை குறித்து டோணிக்கு ஒருமுறை கூடவா சந்தேகம் வரவில்லை என்று பலர் கேட்கிறார்கள்.

நல்ல அனுபவம் இருக்கிறதே

நல்ல அனுபவம் இருக்கிறதே

டோணிக்கு நிர்வாகத்திலும் கூட நல்ல அனுபவம் உள்ளது. அவர் சென்னையின் புட்பால் என்ற அணியை நிர்வகித்து வருகிறார். ஹாக்கி அணியை நிர்வகித்து வருகிறார். எனவே குருநாத் மெய்யப்பனின் நிர்வாக அப்ரோச்சுகள் குறித்து அவருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

சீனிவாசனுக்காக அமைதியாக இருந்தாரா

சீனிவாசனுக்காக அமைதியாக இருந்தாரா

டோணிக்கு நிச்சயம் மெய்யப்பன் குறித்து தகவல்கள் தெரிந்திருக்கலாம் என்றும் இருப்பினும் தான் மதிக்கும் சீனிவாசனுக்காக அவர் அமைதியாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சீனிவாசனுக்கு விசுவாசமாக அவர் அமைதி காத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

உண்மை என்னவோ... டோணியே சொன்னால்தான் உண்டு.

Story first published: Wednesday, July 22, 2015, 14:18 [IST]
Other articles published on Jul 22, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+