For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்திக் பாணடியாவால் ரெக்காட் போச்சு.. கேப்டனாக நீங்க அடிப்படையை சரியாக செய்தீர்களா? சரமாரி கேள்வி

புனே : இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமாக பந்துவீச்சாளர்கள் அடிப்படையை சரியாமல் செய்தது தான் என்று ஹர்திக் பாண்டியா கூறி இருக்கிறார்.

பந்துவீச்சாளர்கள் தவறு செய்தால், கேப்டன் என்ன செய்வார் என்று கம்பீரும் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். அப்போது நேற்று ஹர்திக் பாண்டியா எந்த தவறை செய்ய வில்லையா என்ன?

இருத்தரப்பு தொடரில் இப்படி இக்கட்டான சூழ்நிலையை சந்தித்தால் தான் உலககோப்பை போன்ற தொடரில் சரியாக செயல்பட முடியும் என்று காரணத்தை வேறு ஹர்திக் பாண்டியா கூறுகிறார்.

இந்தியா தோற்றதும் நல்லது தான்.. ஹர்திக் பாண்ட்யா போட்ட திட்டம் பலன் கிடைத்தது.. எப்படி தெரியுமா?? இந்தியா தோற்றதும் நல்லது தான்.. ஹர்திக் பாண்ட்யா போட்ட திட்டம் பலன் கிடைத்தது.. எப்படி தெரியுமா??

 உலககோப்பை தான் முக்கியமா?

உலககோப்பை தான் முக்கியமா?

அப்போது இந்திய அணி நேரடியாக டி20 உலக கோப்பையில் விளையாடலாமே , ஏன் இருத்தரப்பு தொடரில் விளையாடி ரசிகக்ளின் நேரத்தையும், உங்களுடைய நேரத்தையம் வீணாக்க வேண்டும். இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று அப்போது பணம் கொடுத்து போட்டியை பார்க்கும் ரசிகன் என்ன முட்டாளா, உலக கோப்பை தான் முக்கியம் என்றால் ரசிகர்கள் அந்த தொடரை மட்டும் பார்க்கிறோம் என்று சொன்னால் பிசிசிஐயின் பொழப்பு என்ன ஆகும்.

அடிப்படையை செய்தாரா?

அடிப்படையை செய்தாரா?

பந்துவீச்சாளர்கள் நோ பால் வீச கூடாது என்பது அடிப்படை விசயம் தான். ஆனால் கேப்டனாக ஹர்திக் பாண்டியா என்ன செய்தார். இதுவரை புனே மைதானத்தில் சேஸிங் செய்த அணி வெற்றி பெற்றதே இல்லை. இந்த தரவுகளை பார்க்க வேண்டும் என்ற அடிப்படை கூடவா ஹர்திக் பாண்டியாவுக்கு தெரியாது. நெருக்கடியை அனுபவிக்க பழகி கொள்ள வேண்டும் என்றால் தொடரை வென்று விட்டு பழகி கொள்ளலாமே.

பயம் வேண்டும்

பயம் வேண்டும்

அப்படி தலைக்கீழாக குதிப்பேன் என்று சொன்னால், எதுக்கு தனியாக டாஸ் போட வேண்டும். உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள் , எனக்கு சவால் தான் முக்கியம் என்று எதிரணி கேப்டனிடம் ஹர்திக் பாண்டியா கூறி இருக்கலாமே. பயமின்றி இருப்பது தவறு இல்லை தான். ஆனால் பயமே எனக்கு தெரியாது என்று சொன்னால், அது நம்மையே அழித்துவிடும். தற்போது ஹர்திக் அதே தான் செய்கிறார்.

ரெக்கார்ட் போச்சு

ரெக்கார்ட் போச்சு

டெஸ்ட் போட்டியில் ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக இருந்து, டாஸ் வென்றால் முதலில் பந்துவீச தான் தேர்வு செய்ய வேண்டும். இல்லை எனக்கு சவால் தான் முக்கியம் என்று பேட்டிங் செய்தால் அந்த போட்டியை அப்படியே மறந்து விட வேண்டியது தான். சில விசயங்களை சரியாக செய்ய வேண்டும். இல்லை ரிஸ்க் எடுக்கிறேன் என்று நினைத்து விளையாடினால், தொடர்ந்து சேதாரம் தான் மிஞ்சும். நேற்று, சரியாக டாஸ் வென்று இந்தியா முதலில் பேட்டிங் செய்திருந்தால், இந்நேரம் இலங்கையிடம் 7 ஆண்டுகளாக சொந்த மண்ணில் வீழ்ந்தது இல்லை என்ற ரெக்கார்டாவத மிஞ்சி இருக்கும்.

Story first published: Friday, January 6, 2023, 13:10 [IST]
Other articles published on Jan 6, 2023
English summary
Did Hardik pandya follows the basic rule as captain - Experts slams
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X