Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியிடம் மன்னிப்பு கேட்ட நவீன் உல் ஹக்.. ஹாப்பியான ரசிகர்கள்.. அப்புறம் தான் நடந்த டிவிஸ்டே

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லக்னோ வீரர் நவீன் உல் ஹக்கும் ஆர் சி பி அணியின் விராட் கோலியும் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனை முடிவடைந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகப் போகிறது.

ஆனால் இவ்விருவரும் சமாதானம் ஆனது போல் தெரியவில்லை. குறிப்பாக விராட் கோலி இந்த மோதலுக்கு பிறகு லக்னோ குஜராத் அணிகள் விளையாடிய போட்டியில் குஜராத் அணிக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டார்.

Did Naveen ul haq apologized to virat kohli - Here is what happened

இதன் பிறகு இதற்கு பதிலடி தரும் விதமாக ஆர் சி பி மும்பையுடன் தோல்வியை தழுவிய நிலையில், ஒரு ஆட்டத்தில் விராட் கோலியை கிண்டல் செய்ய விதமாக மாம்பழம் சாப்பிட்டு அதன் புகைப்படத்தை சமூக வளத்தில் பதிவிட்டு நவீன் உல் ஹக் பிரச்சனையை பெரிதாக்கினார். இதனை அடுத்து நவீன் உல் ஹக்குடன் விளையாடும் போட்டிகள் எல்லாம் ரசிகர்கள் விராட் கோலி கோலி என்று கத்தி அவரை வெறுப்பேற்றினர்.

இந்த நிலையில் விராட் கோலியிடம் தாம் மன்னிப்பு கேட்பது போல் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு வெளியானது. இதனால் நவீன் உல் ஹக் தனது தவறை திருத்திக் கொண்டதாக ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர். ஆனால் அப்போதுதான் ஒரு ட்விஸ்ட் ஏற்பட்டது. அது நவீன் உல் ஹக், ட்விட்டர் கணக்கே இல்லை என்றும் கோலி ரசிகர்கள் சிலர்தான் நவீன் உல் ஹக் பெயரில் போலியான ஒரு அக்கவுண்ட்டை உருவாக்கி அதற்கு பணம் கொடுத்து ப்ளூ டிக் வாங்கி கோலியிடம் அவர் மன்னிப்பு கேட்பது போல் சமூக வலைத்தளத்தில் இவ்வாறு செயல் பட்டிருக்கிறார்கள்.

இது பற்றி அறிந்த நவீன் உல் ஹக், இது போலியான அக்கவுண்ட் என்றும் இதனை யாரும் பின்பற்ற வேண்டாம் என்றும் வலியுறுத்தி உள்ளார். விராட் கோலி ரசிகர்களின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டிவிட்டரில் பணம் கொடுத்தால் ப்ளூ டிக் கிடைத்து விடுகிறது என்பதால் பல பிரபலங்களுக்கும் இது போன்ற பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

Story first published: Saturday, May 27, 2023, 22:51 [IST]
Other articles published on May 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+