Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நேற்றைய ஆஷஸ் போட்டியில் உண்மையில் சூதாட்டம் நடந்ததா.. என்ன சொல்கிறது ஐசிசி

பெர்த்: ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சூதாட்டம் நடக்க இருப்பதாக நேற்று செய்திகள் வெளியானது. எந்த மாதிரி சூதாட்டம் நடக்கும், யாரிடம் பணம் கை மாற போகிறது என்பது குறித்த செய்திகள் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவை சேர்ந்த சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா என்ற இரண்டு சூதாட்ட நபர்கள், 'தி சன்' ஆங்கில டேப்ளாய்ட் நடத்திய ரகசிய ஸ்டிங் ஆபரேஷனில் இந்த உண்மையை சொல்லி உள்ளனர். இந்த விஷயம் கிரிக்கெட் உலகையே உலுக்கியது. இந்த நிலையில் இந்த போட்டியில் உண்மையில் சூதாட்டம் நடந்ததா என்பது குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

அதுபோல் ஐசிசி, ஆஸ்திரேலிய, இங்கிலாந்து கிரிக்கெட் சங்கங்களும் இதுகுறித்த உண்மைகளை வெளியிட்டு இருக்கிறது. இன்னும் நான்கு நாள் போட்டி மீதம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆஷஸ் மூன்றாவது டெஸ்ட்

ஆஷஸ் மூன்றாவது டெஸ்ட்

ஆஸ்திரேலியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையில் ஆஷஸ் தொடர் நடந்து கொண்டு இருக்கிறது. பல்வேறு காரணங்களுக்காக இந்த போட்டி இந்த முறையும் வைரல் ஆகியுள்ளது. தற்போது சூதாட்ட புகார் காரணமாகவும் இந்த போட்டி பேமஸ் ஆகி இருக்கிறது. ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து வீரர்கள் சிலர் சூதாட்ட நபர்களிடம் பணம் வாங்கி இருப்பதாகவும், சிலர் சூதாட்டம் செய்ய இருப்பதாகவும் 'தி சன்' ஆங்கில டேப்ளாய்ட் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் தகவல்கள் வெளியே வந்தது.

மறுப்பு தெரிவித்த ஐசிசி

மறுப்பு தெரிவித்த ஐசிசி

சூதாட்ட புகார் குறித்த செய்திகள் வெளியானதும் ஐசிசி உடனாடியாக அதற்கு மறுப்பு தெரிவித்தது. ஐசிசி ஊழலுக்கு எதிரான அமைப்பின் தலைவர் அலெக்ஸ் மார்ஷல் இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். அதில் ''இந்த போட்டியில் சூதாட்டம் நடத்துவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. எல்லாம் சரியாகவே இருக்கிறது. சூதாட்ட நபர்கள் வீரர்களை அணுகுவது கண்டிப்பாக கண்காணிக்கப்படும்'' என்று கூறியிருந்தார். அதேபோல் கிரிக்கெட்டில் சூதாட்டத்திற்கு இடம் இல்லை என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்து இருந்தார்.

விசாரணை நடக்கும்

விசாரணை நடக்கும்

தற்போது ஐசிசி இந்த புகாரில் புதிய முடிவை எடுத்து இருக்கிறது. அதன்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகிகள் அனைவரையும் தனித்தனியாக விசாரிக்க முடிவு செய்து உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்க தலைவர் ஜேம்ஸ் சதர்லேண்ட் மீது முதல் கட்ட விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் டி-20 தொடரில் சூதாட்டம் நடந்து இருப்பதாக சில வரிகள் அந்த வீடியோவில் உள்ளது. இதையடுத்தே இந்த விசாரணைக்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

சூதாட்டம் நடந்ததா

சூதாட்டம் நடந்ததா

தற்போது நேற்றைய போட்டியில் சூதாட்டம் நடந்ததா என்ற அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் நேற்று அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று கூறியுள்ளனர். ஆஸ்திரேலிய, இங்கிலாந்து கிரிக்கெட் சங்கங்களும் இதே விஷயத்தை தான் கூறியுள்ளது. ஆனால் சூதாட்டகாரர்கள் ஐந்து நாள் போட்டியில் 2,3,4 நாள் போட்டியில் மட்டும் சூதாட்டம் நடக்கும் என்று கூறியுள்ளது. எனவே மீதம் இருக்கும் நான்கு நாட்களும் போட்டியை தீவிரமாக கண்காணிக்க ஐசிசி முடிவெடுத்து இருக்கிறது.

Story first published: Friday, December 15, 2017, 13:07 [IST]
Other articles published on Dec 15, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+