வீரர்களை களத்தில் அவமானப்படுத்திய ரோகித் சர்மா.. கேப்டனே இப்படி செய்யலாமா..? கோலி ரசிகர்கள் கேள்வி
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா வேகப்பந்துவீச்சாளர்களை அவமானப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆசிய கோப்பை தொடரில் ரோஹித் சர்மா எப்போதும் பதற்றமாகவே காணப்பட்டார்.இது கொஞ்சம் வழக்கத்திற்கு மாறாக இருந்தது.
குறிப்பாக பந்துவீச்சாளர்கள் அதிக ரன்கள் விட்டுக் கொடுக்கும் போது தன்னுடைய விரக்தியை முகத்தில் அடிக்கடி காட்டினார்.

பாக். வீரர்கள் கேள்வி
இது குறித்து பேசிய பாகிஸ்தான் வீரர்கள் வசிம் அக்ரம், முகமது ஹபீஸ் ஆகியோர் ரோகித் சர்மாவின் உடல் மொழி வித்தியாசமாக இருப்பதாகவும் அவர் களத்தில் எப்போதும் டென்ஷனாக இருப்பது போல் தெரிவதாக குறிப்பிட்டுள்ளனர். ஏதேனும் பிடிக்காத விஷயம் நடைபெறுகிறதா என்று தெரியவில்லை. ஆனால் ரோகிதின் உடல் மொழியில் ஏதோ தவறு நடக்கிறது என்று மட்டும் புரிகிறது என்றும் கூறியிருந்தனர்.

ஆர்ஸ்தீப் சிங்குடன் ரோகித்
இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான போட்டியின் போது ஆர்ஸ்தீப் சிங், ரோகித் சர்மாவிடம் சென்று தமக்கு இங்கே பில்டர்கள் வேண்டும் என்று கேட்டார். ஆனால் அதற்கு ரோகித் சர்மா முகத்தை திருப்பி கொண்டு இருக்கிறதை வைத்து பந்து வீசு என்று சொன்னது போல் காட்சிகள் வெளியாகின. ரோகித் சர்மாவின் இந்த ரியாக்ஷனை பார்த்து ஆர்ஸ்தீப் சிங் மனமுடைந்து திரும்பிச் சென்றதாகவும் கூறப்பட்டன.

கோலி ரசிகர்கள் கேள்வி
இந்த வீடியோவை தற்போது விராட் கோலி ரசிகர்கள் அதிக அளவு இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். கோலி களத்தில் ஆக்ரோஷமாக இருந்தாலும் தனது வீரர்களை ஒருபோதும் இப்படி முகத்தை திருப்பி கொண்டு பேசியது கிடையாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ரோகித் சர்மா சொந்த அணியினரே இப்படி கேவலப்படுத்தி விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பொதுவாக ஒரு வீரர் தனது கேப்டனிடம் எனக்கு இப்படி பில்டிங் வேண்டும் என்று கூறும்போது அதற்கு கேப்டன் செவி சாய்த்து முடிவெடுப்பார்.

ரோகித்துக்கு நெருக்கடி
ஒரு சமயம் இல்லை அது சரிவராது நான் சொல்வது போல் வீசு என்று சொல்வார்கள். ஆனால் ரோகித் சர்மா எதுவுமே சொல்லாமல் இருக்கிறதை வைத்து போடு என்று முகத்தை திருப்பி கொண்டு சென்றது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரோகித் சர்மா தொடர்ந்து டி20 தொடர்களை வென்று அசத்தி வந்த நிலையில் ஆசிய கோப்பை தொடரில் அவர் பெற்ற தோல்வி அவருக்கு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. நெருக்கடியான சம்பவத்தில் ரோகித் சர்மா தன்னம்பிக்கை இழந்து விரக்தி அடைகிறது அவருடைய இந்த நடவடிக்கை காரணம் என்று கிரிக்கெட் விமர்சனங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications