Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியின் டி20 இன்னிங்ஸை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டிக்ளேர் செய்ததாக பரவும் தகவல்.. உண்மை இதுதான்!

ஹைதராபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இன்னும் 3 பந்துகள் மீதமிருந்த போதே கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய இன்னிங்ஸை முடித்துக்கொண்டு வெளியேறியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அதன் உண்மைத்தன்மை என்ன? ஸ்ரேயாஸ் ஐயர் ஏன் களத்தில் இருந்த வீரர்களை வெளியேறுமாறு சொன்னார்? என்று பார்க்கலாம்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 248 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 19.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்துத் தவித்தது. இந்திய அணியின் வெற்றிக்கு 3 பந்துகளில் 25 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் களத்தில் இருந்த அர்ஷ்தீப் சிங் மற்றும் மயங்க் யாதவ் ஆகியோரை வெளியேறுமாறு சொன்னார். அதனால் 3 பந்துகள் இருந்த நிலையில் போட்டி முடிவுக்கு வந்தது. இதைப் பார்த்த சிலர், சர்வதேச டி20 வரலாற்றிலேயே முதல்முறையாக ஸ்ரேயாஸ் ஐயர் இன்னிங்ஸை பாதியிலேயே டிக்ளேர் செய்துவிட்டதாக வதந்தியைப் பரப்பினர். ஆனால் ஐசிசி விதிகளின்படி டி20 போட்டிகளில் இன்னிங்ஸை டிக்ளேர் செய்ய அனுமதியே கிடையாது.

Did Shreyas Iyer Declare India s Innings during 4th T20I against West Indies at Hyderabad Social Media Post Explained

அப்போது களத்தில் உண்மையில் நடந்தது இதுதான். கடைசி கட்டத்தில் பேட்டிங் செய்த வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு, வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப் கடுமையான பவுன்சரை வீசினார். அந்தப் பந்து அர்ஷ்தீப்பின் தோள்பட்டையில் பலமாகத் தாக்கியதில் அவர் வலியால் துடித்தார். அடுத்த பந்திலும் ஜோசப் மீண்டும் அதே காயமடைந்த தோள்பட்டையைக் குறிவைத்து ஆக்ரோஷமாக பந்தை வீசினார்.

சனிக்கிழமை பெங்களூருவில் தொடரைத் தீர்மானிக்கும் கடைசி போட்டி நடைபெறவுள்ள நிலையில், முதன்மை பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கிற்கு மேலும் காயம் பெரிதாகிவிடக் கூடாது என்பதில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கவனமாக இருந்தார். கடைசி 3 பந்துகளில் இந்திய அணியின் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்பதால், அர்ஷ்தீப்பை உடனே வெளியேறிவிடுமாறு சைகை காட்டி அழைத்தார்.

"ஃபுல் டாஸ் போட்டுட்டு பிட்ச் மேல பழி சொல்வதா?".. இந்திய பவுலர்களை கிழித்துத் தொங்கவிட்ட கவாஸ்கர்

இதையடுத்து அர்ஷ்தீப் சிங் காயம் காரணமாக ஆட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார். அவர் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறி இருந்தாலும் களமிறங்க மாற்று பேட்டர்கள் இல்லாததால் கடைசி பேட்ஸ்மேனான அர்ஷ்தீப் சிங் ஆட்டமிழந்ததாக கருதப்பட்டது. அத்துடன் ஆட்டம் தானாக முடிவுக்கு வந்து வெஸ்ட் இண்டீஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அம்பயர்கள் அறிவித்தனர். எனவே இது டிக்ளேர் செய்யப்பட்ட முடிவு அல்ல. இதை திரித்து ஸ்ரேயாஸ் ஐயர் டி20 இன்னிங்ஸ்-ஐ டிக்ளேர் செய்து விட்டதாக சிலர் பரப்பி வருகின்றனர்.

Story first published: Thursday, October 15, 2026, 10:45 [IST]
Other articles published on Oct 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+