Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

9 டக்கு.. ஒரே ஒரு டன்.... பிளைட்டை எடுத்துக் கொண்டு வந்த வெட்டிமுனி!

மெல்போர்ன்: உலகக் கோப்பை இறுதிப் போட்டி என்றாலே சுவாரஸ்யமானதுதான். பெரும் பரபரப்புகளுக்கு மத்தியில் நிறைய காமெடிகளும், சோகங்களும், திருப்பங்களும் அரங்கேறும். அந்த வகையில் 1979ல் நடந்த இறுதிப் போட்டி மறக்க முடியாதது.

1979ம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும், இங்கிலாந்தும் மோதின. இந்தப் போட்டியில் மொத்தம் 9 வீரர்கள் டக் அவுட் ஆகினர். இது ஒரு சாதனையாக இன்றளவும் உள்ளது.

மேற்கு இந்தியத் தீவுகள் கொடி கட்டிப் பறந்த காலம் அது. விவ் ரிச்சர்ட்ஸ் போன்ற அபாயகரமான பேட்ஸ்மேன் அதகளப்படுத்திய சமயம் அது. கிளைவ் லாயிட் என்ற பிரமாதமான கேப்டன் தலைமையில் மிகப் பயங்கரமான அதி வேகப் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய காலம் அது.

உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளை வைத்து சுவம் பால் என்பவர் ஒரு நூல் எழுதியுள்ளார். அதில் இறுதிப் போட்டிகளில் நடந்த சுவாரஸ்யங்கள் குறித்துத் தொகுத்துள்ளார்.

கடைசி நேரத்தில் உள்ளே வந்த ரோஹன் கன்ஹாய்

கடைசி நேரத்தில் உள்ளே வந்த ரோஹன் கன்ஹாய்

1975 உலகக் கோப்பை இறுதிப் போட்டியினபோது மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் கடைசி நேரத்தில் கேரி சோபர்ஸ் காயம் காரணமாக விலகவே, ரோஹன் கன்ஹாய் உள்ளே கொண்டு வரப்பட்டார். அதுதான் அவரது கடைசி சர்வதேச ஒரு நாள் போட்டியானது. அந்தப் போட்டியில் அவர் 55 ரன்களை எடுத்தார்.

லாயிடுடன் இணைந்து அசத்தல்

லாயிடுடன் இணைந்து அசத்தல்

ஒருபக்கம் லாயிட் அதிரடியாக விளையாட, மறுபக்கம் ரோஹன் நிதானமாக ஆட இருவரும் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 149 ரன்களைச் சேர்த்தனர்.

11 ஓவர்களுக்கு ஒரு ரன் கூட இல்லை

11 ஓவர்களுக்கு ஒரு ரன் கூட இல்லை

அதை விட காமெடி ஆட வந்து 11 ஓவர் வரை அவர் ரன்னே எடுக்கவில்லை.. அவ்வளவு நிதானமாக ஆடி ரசிகர்களையும் சோதித்தார். 1975 இறுதிப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது.

9 டக்கு... ஒரு டன்

9 டக்கு... ஒரு டன்

1979 இறுதிப் போட்டி மிகவும் வித்தியாசமானது. இந்தத் தொடரிலும் மேற்கு இந்தியத் தீவுகளே சாம்பியன் ஆனது. இப்போட்டியில் இரு அணிகளிலும் 9 பேர் ரன் எடுக்கால் டக் அவுட் ஆனார்கள். ஒரே ஒரு சதம் மட்டுமே எடுக்கப்பட்டது.

உனக்கு 5... எனக்கு 4

உனக்கு 5... எனக்கு 4

மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில் ஆண்டி ராபர்ட்ஸ், ஜோயல் கார்னர், மைக்கேல் ஹோல்டிங், காலின் கிராப்ட் ஆகியோர் முட்டை போட்டனர். இதில் காலின் கிராப்ட் ரன்னும் எடுக்கவில்லை. கடைசி வரை ஆட்டமிழக்கவும் இல்லை. மற்ற மூவரும் டக் அவுட் ஆனார்கள். இந்த நால்வருமே அப்போது அதி பயங்கரமான வேகப் பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்துக்கு 5 அவுட்

இங்கிலாந்துக்கு 5 அவுட்

இங்கிலாந்து வீரர்களில் டேவிட் கோவர், வேயன் லார்கின்ஸ், கிறிஸ் ஓல்ட், பாப் டெய்லர், மைக் ஹென்ட்ரிக் ஆகியோர் ரன் எடுக்காமல் அவுட் ஆனார்கள்.

அட நம்ம வெட்டி!

அட நம்ம வெட்டி!

6வது உலகக் கோப்பையை இலங்கை வென்றது. 1996ல் இதை அது சாதித்தது. உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியை அழைத்துச் செல்ல லாகூருக்கு சிறப்பு விமானத்தை அனுப்பியிருந்தது இலங்கை அரசு. அந்த விமானத்தை ஓட்டி வந்த பைலட், முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் வெட்டிமுனி ஆவார்.

இரு உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியவர்

இரு உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியவர்

வெட்டிமுனி, 1975 மற்றும் 1979 ஆகிய இரு உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியவர். தொடக்க ஆட்டக்காரர். அப்போதைய இலங்கை அணியில் பிரலமானவர். பின்னர் பைலட் ஆகி விட்டார்.

இந்தியாவுக்கு ஷாக் கொடுத்தவர்

இந்தியாவுக்கு ஷாக் கொடுத்தவர்

1979ம் ஆண்டு அப்போதைய குட்டி அணியான இலங்கை, இந்தியாவை தோற்கடித்து அனைவரையும் அதிர வைத்திருந்தது. அந்தப் போட்டியில் இலங்கை அணியில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்தவர் வெட்டிமுனிதான்.

Story first published: Sunday, March 29, 2015, 12:03 [IST]
Other articles published on Mar 29, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+