Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெண்டுல்கரைப் பார்த்து வளர்ந்தேன்.. அவரது ஓய்வைப் பற்றி என்ன சொல்வது?...: கலங்கும் கோஹ்லி

Difficult moment when Sachin retires, says Kohli
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கரைப் போல உருவாக வேண்டும் என்று வளர்ந்த நான் அவரது ஓய்வைப் பற்றி என்ன சொல்வேன்? என்று கலங்குகிறார் இந்திய வீரர் விராட் கோஹ்லி.

டெண்டுல்கர் தமது 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் வீரர் விராட் கோஹ்லி, நான் டெண்டுல்கர் விளையாடுவதைப் பார்த்து வளர்ந்தேன்.. டெண்டுல்கரைப் போல்தான் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்பினேன்.

இப்போது அவர் ஓய்வு பெறுவது என்பது மிகவும் வலிதரும் நேரம்.. எங்கள் அனைவருக்கும் மிகப் பெரிய முன்னோடி. கடந்த 24 ஆண்டுகாலத்தில் டெண்டுல்கர் இல்லாத ஒரு இந்திய அணியை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

அவர் ஓய்வு பெறும் போது என்னுடைய உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவேன் என்று எனக்குத் தெரியவில்லை. இந்தியர்களாகிய நாம் அனைவருக்குமே அவரது ஓய்வு கவலைக்குரிய ஒன்றுதான் என்றார்.

Story first published: Tuesday, October 15, 2013, 17:39 [IST]
Other articles published on Oct 15, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+