Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொஞ்சம் முயற்சி செய்யுங்க.. இந்தியாவின் அடுத்த விராட் கோலி நீங்க தான்.. தினேஷ் கார்த்திக் அறிவுரை

மும்பை : வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவினாலும் சில நல்ல விஷயங்களும் நடைபெற்று இருக்கின்றன.

இந்திய அணியின் சீனியர் வீரர்கள் இருந்தாலும், பல இளம் வீரர்கள் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் , இளம் வீரர் ஒருவர் கொஞ்சம் முயற்சி செய்தால் அடுத்த விராட் கோலி ஆக மாறலாம் என்று கூறியுள்ளார்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் , தனக்கு கிடைக்கும் வாய்ப்பில் சிறப்பாக ரன் சேர்த்து வருகிறார். நடப்பாண்டில் மட்டும் அவர் 700 ரன்களை அடித்திருக்கிறார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயரின் நம்பிக்கையை நீங்கள் பேட்டிங்கில் பார்க்கலாம்.ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் எப்போதுமே நன்றாகத்தான் விளையாடிக் கொண்டிருக்கிறார் ஏனெனில் ஒரு நாள் கிரிக்கெட்டில் நீங்கள் தொடக்கத்தில் சில பந்துகளை வீணடித்து விட்டு பிறகு அதனை சரிகட்டும் விதமாக ரன் சேர்க்கலாம்.

ஆதிக்கம்

ஆதிக்கம்

ஸ்ரேயாஸ் ஐயர் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக பிரமாதமாக விளையாடி வருகிறார். ஆனால் எதிரணி பந்துவீச்சாளர்கள் ஷாட் பாலை வீசி அவருக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். தற்போது இந்த ஷாட்பாலை அவர் எதிர்கொள்ளும் யுத்தியை கற்றுக் கொண்டார் என நினைக்கிறேன்.எப்போதும் அவர் களத்திற்கு வரும்போது ஏதேனும் சாதிக்க வேண்டும் என வெறியுடன் களம் இறங்குகிறார். அணிக்காக கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என நினைக்கிறார். வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் கூட பந்துவீச்சாளர்கள் மீது அவர் ஆதிக்கம் செலுத்தினார்.

அறிவுரை

அறிவுரை

சுற்றி விக்கெட்டுகள் விழும் போது அவர் தன்னுடைய நம்பிக்கையை விட்டுக் கொடுக்கவில்லை. இது எனக்கு ஸ்ரேயாஸ் ஐயரிடம் மிகவும் பிடித்த விஷயமாக இருந்தது.இந்திய அணியை வெற்றியின் அருகே கொண்டு சென்று விட்டார். ஆனால் நீங்கள் ஒரு பெரிய வீரராக பெயர் எடுக்க வேண்டும் என்றால் விராட் கோலி போல் மாற வேண்டும் என்றால் முக்கியமான ஆட்டத்தில் நீங்கள் 120 ,130 ரன்கள் அடிக்க வேண்டும்.

அப்படி செய்தால் தான் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்திய அணி சேஸிங் செய்யும் போது நீங்கள் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நிற்க வேண்டும்.

அடுத்த விராட் கோலி

அடுத்த விராட் கோலி

அது மட்டும் தான் ஸ்ரேயாஸ் ஐயரிடம் மிஸ் ஆகி இருக்கிறது. நீங்கள் 82 ரன்கள் அடித்தாலும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றால்தான் அதற்கு பாராட்டு கிடைக்கும் .நடுவரிசை வீரராக களமிறங்கி இதுபோன்று நீங்கள் வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும். இதை நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் வருங்காலத்தில் பல அணிகள் உங்களைப் பார்த்து பயப்படும் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

Story first published: Friday, December 9, 2022, 11:47 [IST]
Other articles published on Dec 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+