Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சபாஷ் சரியான போட்டி.. ஆஸி, ஜாம்பவானிடம் சவால் விடுத்த தினேஷ் கார்த்திக்.. ஜெயிப்பாரா? மாட்டாரா?

நாக்பூர்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் போது கமெண்டேட்டரி அறையில் தினேஷ் கார்த்திக் மற்றும் மார்க் வாக் இடையே காரசாரமான மோதல் நடந்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி நாக்பூரில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்தனர் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள்.

அந்த அணியில் மார்னஸ் (49), ஸ்டீவ் ஸ்மித் (37) ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரியளவில் சோபிக்கவில்லை. இதனால் 177 ரன்களுக்கெல்லாம் அந்த அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்களையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களையும் அள்ளினர். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. ஓப்பனிங் வீரர்கள் ரோகித் சர்மா (56) - கே.எல்.ராகுல் (20 ) ஆகியோர் முதல் விக்கெட்டிற்கே 76 ரன்களை சேர்த்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ரன்களை சேர்த்திருந்தனர்.

 தினேஷ் கார்த்திக் பேச்சு

தினேஷ் கார்த்திக் பேச்சு

இந்நிலையில் இந்த போட்டியின் முடிவு குறித்து பேசிக்கொண்டிருக்கையில் வர்ணனையாளர்கள் தினேஷ் கார்த்திக், மார்க் வாக் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அது இறுதியில் சவாலில் சென்று முடிந்ததாக தெரிகிறது. இந்தியாவின் பேட்டிங்கை பார்த்த தினேஷ் கார்த்திக், இந்த போட்டியில் இந்திய அணி ஒரே ஒரு இன்னிங்ஸில் மட்டும் தான் பேட்டிங் செய்யும் என நினைக்கிறேன் எனக்கூறினார்.

சவால்?

சவால்?

இதன்பின்னர் பேசியது பின் வருமாறு

மார்க் வாக் : அதையும் தான் பார்த்துவிடுவோம் தினேஷ் கார்த்திக், நீங்கள் கூறியது நடக்கிறதா என்பதை பார்ப்போம்?

தினேஷ் : வார்த்தைகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.. நிச்சயம் நடக்கும்

மார்க் வாக் : எனது டைரியில் குறித்துக்கொண்டேன். நீங்கள் சொன்னது ஒருவேளை நடக்கலாம். ஆனால் அது அவ்வளவு சாதாரண காரியம் அல்ல.

தினேஷ்: நீங்கள் சொல்வது போல அது அவ்வளவு சுலபம் அல்ல தான். ஆனால் அதே சமயம் ஆஸ்திரேலிய பேட்டர்களை சுருட்டுவதும் சிரமம் கிடையாது

மார்க் வாக்: ஒரு அணி விளையாடியதை மட்டுமே வைத்து பிட்ச்-ஐ கணிக்கக்கூடாது. இரு அணிகளும் பேட்டிங் ஆடிய பிறகு தான் கணிக்க வேண்டும். இந்திய அணியை ஆஸ்திரேலியா எளிதில் விட்டுவிடாது. ஏனென்றால் ஆஸ்திரேலியாவில் இருப்பது போல இந்தியாவில் 60 ரன்கள் சராசரி கொண்ட 2 வீரர்களை கூட இந்தியாவில் பார்க்க முடியவில்லை.

தினேஷ் கார்த்திக்: ஒரே ஒரு இந்திய அணியிலும் இருக்கிறார், அவருக்கு 60 ரன்கள் சராசரி இருக்கிறது. பார்த்துவிடுவோம்.

நிலவரம் என்ன?

நிலவரம் என்ன?

நாக்பூர் பிட்ச் நாட்கள் போக போக ஸ்பின்னர்களுக்கு மிகவும் சாதகமாக மாறிக்கொண்டே செல்லும். நாளைய நாள் ஆட்டத்தின் போது இந்திய அணி குறைந்தது 2 செஷன்களிலாவது நிலைத்து நின்று ஆட வேண்டும். அப்படிமட்டும் செய்துவிட்டால் நிச்சயம் தினேஷ் கார்த்திக் சொல்வது நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு .

Story first published: Thursday, February 9, 2023, 23:52 [IST]
Other articles published on Feb 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+