Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓடி ஒளிய முடியாது.. தினேஷ் கார்த்திக் செய்யும் போது.. தோனியால் முடியாதா.. வச்சு செய்யும் சிஎஸ்கே!

சென்னை: இளம் தமிழக வீரர்களை வைத்து, அதிலும் பல சிஎஸ்கே வீரர்களை வைத்து சையது முஷ்டாக் கோப்பையை தினேஷ் கார்த்திக் வென்று இருக்கிறார். தினேஷ் கார்த்திக்கின் இந்த கேப்டன்சி தோனிக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.

மிகவும் விறுவிறுப்பாக சென்ற சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக அணி வெற்றிபெற்றது. வரிசையாக 8 போட்டிகளில் வென்று தமிழ்நாடு அணி கோப்பை வென்றுள்ளது.

பரோடா அணியை இறுதி போட்டியில் வீழ்த்தி தமிழக அணி கோப்பையை இரண்டாவது முறையாக வென்றுள்ளது. தமிழக வீரர்கள் இந்த தொடரில் நன்றாக ஆடி உள்ளனர்.

தமிழக வீரர்கள்

தமிழக வீரர்கள்

இளம் தமிழக வீரர்களை வைத்து, அதிலும் பல சிஎஸ்கே வீரர்களை வைத்து சையது முஷ்டாக் கோப்பையை தினேஷ் கார்த்திக் வென்று இருக்கிறார். முக்கியமாக அனுபவ வீரர்கள் பலர் இல்லாமல் தமிழக அணியை தினேஷ் கார்த்திக் வெற்றிபெற வைத்துள்ளார். தினேஷ் கார்த்திக்கின் இந்த கேப்டன்சி தோனிக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழக அணியில் சாய் கிஷோர், என் ஜெகதீசன் ஆகிய வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். இவர்கள் இரண்டு பேருமே சிஎஸ்கே வீரர்கள். சிஎஸ்கே அணியில் இவர்கள் ஆடிய போது இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. என் ஜெகதீசன் இரண்டு போட்டிகளில் மட்டும் சிஎஸ்கே அணிக்காக ஆடினார்.

 சாய் கிஷோர்

சாய் கிஷோர்

சாய் கிஷோர் சிஎஸ்கே அணியில் இருந்தும் கூட வாய்ப்பு பெறாமல் இருக்கிறார். சிறப்பாக பவுலிங் செய்தும் கூட இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவது இல்லை. ஜெகதீசன், சாய் கிஷோர் இரண்டு பேருமே தமிழ்நாடு அணிக்கு மேட்ச் வின்னராக இருந்தனர். அணியை முக்கியமான கட்டங்களில் இவர்கள்தான் வெற்றிபெற வைத்தது.

திறமை

திறமை

இவர்களின் திறமையை தினேஷ் கார்த்திக் சரியாக கண்டுபிடித்து, வாய்ப்பு கொடுத்து ஆடவைத்தார். தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை இவர்கள் சரியாக பயன்படுத்தி அணியை வெற்றிபெற வைத்தனர். ஆனால் இவர்களை சிஎஸ்கே அணியில் தோனி கொஞ்சம் கூட மதிக்கவில்லை.

மதிக்கவில்லை

மதிக்கவில்லை

அதிலும் கடந்த சீசனில் சிஎஸ்கே அணியில் நல்ல ஸ்பின் பவுலர்கள் இல்லை. அப்போது தோனி மிகவும் கஷ்டப்பட்டார் . ஆனால் அப்போதும் கூட சாய் கிஷோருக்கு தோனி வாய்ப்பு கொடுக்கவே இல்லை. அதே சாய் கிஷோரை வைத்து தினேஷ் கார்த்திக் கப் அடித்து இருக்கிறார்.

சாய் கிஷோர்

சாய் கிஷோர்

தோனி யாரிடம் ஸ்பார்க் இல்லை என்று கூறினாரோ அவர்கள்தான் தமிழக அணியை வெற்றிபெற வைத்துள்ளனர். இதனால் தோனிக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக்கால் தமிழக வீரர்களை வைத்து வெற்றிபெற முடியும் போது தோனியால் முடியாதா என்று கேள்வி எழுந்துள்ளது .

சிஎஸ்கே

சிஎஸ்கே

சிஎஸ்கே நிர்வாகிகள் சிலரும் கூட தோனிக்கு இது தொடர்பாக நெருக்கடி கொடுத்துள்ளனர். இளம் வீரர்களுக்கு இந்த சீசனிலாவது வாய்ப்பு கொடுக்க வேண்டும்.இந்த முறையும் மூத்த வீரர்களை குறி வைக்க கூடாது என்று தோனிக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கி உள்ளனர்.

Story first published: Wednesday, February 3, 2021, 16:22 [IST]
Other articles published on Feb 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+