அடுத்த தமிழக வீரரும் காலி?.. எவ்வளவு எதிர்பார்த்தோம்.. இப்படி பண்ணலாமா.. தினேஷ் கார்த்திக் ஷாக்!
சென்னை: சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக அணியின் மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் பெரிய அளவில் ஆடாதது அதிர்ச்சி அளித்துள்ளது.
சையது முஷ்டாக் அலி கோப்பை தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. தமிழ்நாடு, பரோடா உள்ளிட்ட அணிகள் தற்போது அரையிறுதி சுற்றுக்கு தயாராகி உள்ளது.
இந்த தொடரில் தமிழக அணி தொடக்கத்தில் இருந்தே மிகவும் சிறப்பாக ஆடி வந்தது. தமிழக அணியில் இருக்கும் இளம் வீரர்கள் ஒவ்வொருவரும் அணியின் வெற்றிக்கு முக்கியமான கட்டங்களில் உதவினார்கள்.

யார்
முக்கியமாக ஹரி நிஷாந்த், ஷாருக்கான், பாபா அபராஜித் ஆகிய வீரர்கள் தமிழக அணிக்காக தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார்கள். ஆனால் தமிழக அணியின் மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் இந்த முறை அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை. தினேஷ் கார்த்திக் இந்த தொடரின் தொடக்கத்தில் நன்றாக ஆடினார் .

மோசம்
ஆனால் போக போக லீக் ஆட்டங்களிலும், நாக் அவுட் ஆட்டங்களிலும் தினேஷ் கார்த்திக் சொதப்ப தொடங்கினார். தேவையில்லாத ஷாட்களை ஆடி, விக்கெட்டுகளை பறிகொடுத்தார். தினேஷ் கார்த்திக் சில போட்டிகளில் ஆடிய விதம் பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளானது.

விமர்சனம்
இந்திய டி 20 அணியில் இடம் கிடைக்காமல் தினேஷ் கார்த்திக் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார். டி 20அணியில் இவரை விட இளம் வீரர்கள் பலர் நன்றாக ஆடுகிறார்கள்.கடந்த வருடம் ஐபிஎல் தொடரிலும் இவர் சரியாக ஆடவில்லை.

டி 20
டி 20 உலகக் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் முயன்றார். இதனால் அவர் சையது முஷ்டாக் கோப்பை தொடரில் கவனம் செலுத்தினார். இந்த தொடரில் அவர் சிறப்பாக ஆடி மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

மோசம்
ஆனால் சையது முஷ்டாக் கோப்பை தொடரிலும் மோசமாக ஆடி, தினேஷ் கார்த்திக் அதிர்ச்சி அளித்துள்ளார். இந்த தொடரில் தமிழக வீரர் விஜய் சங்கர், முரளி விஜய் ஆகியோர் ஆடவில்லை. தற்போது இன்னொரு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும் மோசமாக சொதப்புவது அதிர்ச்சி அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications