தமிழ்நாடு டீம்ல எல்லோருக்கும் அவர் அப்பா மாதிரி... கண்கலங்கிய ஷாருக்கான்
டெல்லி : தமிழக அணியின் கேப்டனாக செயல்பட்டு சிறப்பான பங்களிப்பை அளித்து வருபவர் தினேஷ் கார்த்திக்.
ஐபிஎல்லின் கடந்த சீசனில் கேகேஆர் அணிக்காக கேப்டனாக செயல்பட்ட அவர் இடையில் அதை விட்டு விலகினார்.
இந்நிலையில் தினேஷ் கார்த்திக் தமிழக அணியின் அனைவருக்கும் அப்பா போன்றவர் என்று இளம் வீரர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான் பாராட்டு
தமிழக அணியின் கேப்டனாக சிறப்பாக செய்லபட்டு வருபவர் தினேஷ் கார்த்திக். கடந்த முஸ்தாக் அலி கோப்பையை திமிழக அணி சிறப்பாக வெற்றி கொள்ள முக்கிய காரணமாக அமைந்தவர். இந்நிலையில் தமிழக அணியில் இடம்பெற்று கடந்த முஸ்தாக் அலி மற்றும் விஜய் ஹசாரே கோப்பை தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட ஷாருக்கான் தினேஷ் கார்த்திக்கை வெகுவாக பாராட்டியுள்ளார்.

சிறப்பாக வழிநடத்தியவர்
தமிழ்நாட்டு அணியில் உள்ளவர்கள் அனைவருக்கும் தினேஷ் கார்த்திக் அப்பாவை போன்றவர் என்று ஷாருக்கான் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தன்னை அனைத்து சூழ்நிலைகளிலும் சிறப்பாக வழிநடத்தியதாகவும் தன்னை ஒரு கேம் பினிஷராக மாற்றியதாகவும் ஷாருக்கான் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி மட்டும் போதாது
தினேஷ் கார்த்திக் தன்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு தான் கிரிக்கெட்டை நம்பிக்கையுடன் விளையாடி போட்டிகளை முடிக்க காரணமாக அமைந்ததாகவும் ஷாருக் மேலும் தெரிவித்துள்ளார். தன்னுடைய கேரியரில் அவர் உதவியதற்கு தான் நன்றியை மட்டும் கூறினால் போதாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்பிலிருந்து விலகி அதிர்ச்சி
கடந்த ஐபிஎல் சீசினில் கேகேஆர் அணியை முதல் பாதியில் கேப்டனாக இருந்து வழிநடத்தியவர் தினேஷ் கார்த்திக். அவரது தலைமையின்கீழ் அணி சில போட்டிகளில் வெற்றியும் கண்டது. ஆனால் இடையிலேயே அவர் தனது கேப்டன் பொறுப்பை விட்டு விலகினார். இது அப்போது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications