
முக்கிய காரணம் என்ன
இதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட். 2020-21ஆம் ஆண்டில் 11 இன்னிங்ஸில் 544 ரன்களை குவித்து வியக்கவைத்த, பண்ட், கடந்தாண்டு 9 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 191 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனால், பண்ட்- ஐ அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க தொடங்கியது.

அட்டகாச பார்ம்
ஆனால் இந்தாண்டு மீண்டும் விமர்சகர்களின் வாயை அடைத்துள்ளார்.
2021-2022ஆம் ஆண்டில் இதுவரை மொத்தமாக 9 இன்னிங்ஸ்களில் 371 ரன்களை சேர்த்து அசத்தியுள்ளார். இவரின் சராசரி 46.37 ஆகும். குறிப்பாக 28 பந்துகளில் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்தார். இதன் மூலம் இனி ரிஷப் பண்ட் -ன் இடம் நிரந்தரமாகியுள்ளது.

தினேஷ் புகழாரம்
இந்நிலையில் இவர் சேவாக்கின் சாயலை காட்டுவதாக தினேஷ் கார்த்திக் புகழ்ந்துள்ளார். தினேஷ் கார்த்திக், சாஹா போன்றோரின் இடத்தை பறித்தது பண்ட் தான். எனினும் அவரை புகழ்ந்துள்ளார். அதில், ரிஷப் பந்த் நிச்சயம் உலகின் மிகச்சிறந்த வீரராக திகழ்வார். விக்கெட் கீப்பபிங்கிலும் சிலவற்றை சரி செய்தால், தோனியைப் போன்று, கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார். தோனி, ரிஷப் பந்த் இருவருமே இந்திய அணிக்கு கிடைத்த மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் எனக் கூறினார்.
Recommended Video

சேவாக்காக திகழ்வார்
ரிஷப் பண்ட்-ன் பேட்டிங் திறன் தொடர்ந்து மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. எப்படிப்பட்ட சூழலாக இருந்தாலும், புதுபுது முயற்சிகளை எடுக்க தயங்குவதே இல்லை. இதனால்தான், அவர் முன்னெடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண முடிகிறது. அவரது பயமில்லாத ஆட்டம் விரேந்தர் சேவாக்கை நினைவுப் படுத்துகிறது. எதிர்காலத்தில் நிச்சயம் பல சாதனைகளை படைப்பார் என தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications