Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிரேடிங் விண்டோ.. தினேஷ் கார்த்திக்குக்கு டாட்டா காட்டும் கொல்கத்தா?.. ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே!

சிட்னி: கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக் வரும் ஐபிஎல் தொடரில் அணி மாற உள்ளார். கொல்கத்தா அணி மூலம் இவர் விடுவிக்கப்படுவார் என்று கூறுகிறார்கள்.

2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் பிப்ரவரி 11ம் தேதி நடக்க உள்ளது. பெரிய அளவில் ஏலம் நடக்காமல் சிறிய அளவில் ஏலம் நடக்க உள்ளது.

ஏலத்திற்கு முன்பாக வீரர்களை அணி மாற்றும் டிரேடிங் விண்டோ தற்போது திறக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 21ம் தேதி வரை டிரேடிங் விண்டோ திறக்கப்பட்டு இருக்கும்.

மாற்றம்

மாற்றம்

ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் இருக்கும் தேவையில்லாத வீரர்களை டிரேடிங் விண்டோ மூலம் அனுப்பும் எண்ணத்தில் உள்ளது. இதற்கான லிஸ்டை ஐபிஎல் அணிகள் எடுத்து வருகிறது. இந்த தொடரில் சிஎஸ்கேதான் அதிக அளவிலான வீரர்களை டிரேடிங் விண்டோ மூலம் மாற்றும் என்று கூறுகிறார்கள்.

எப்படி

எப்படி

அந்த வகையில் கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக் வரும் ஐபிஎல் தொடரில் அணி மாற உள்ளார். கொல்கத்தா அணி மூலம் இவர் விடுவிக்கப்படுவார் என்று கூறுகிறார்கள். கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் பாதி தொடரில் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

ராஜினாமா

ராஜினாமா

கேப்டன் பதவியில் இவர் நன்றாக செயல்பட்டாலும் தனிப்பட்ட பேட்டிங் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டும் இருந்தார். ஆனால் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பின் தினேஷ் கார்த்திக் பெரிய அளவில் சிறப்பாக ஆடவில்லை. கடந்த ஐபிஎல் முழுக்க இவரின் ஆட்டம் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

 சிஎஸ்கே

சிஎஸ்கே

இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் கொல்கத்தா அணி மூலம் இவர் விடுவிக்கப்படுவார் என்று கூறுகிறார்கள். அதேபோல் இவர் சென்னை அல்லது ராஜஸ்தான் அணி மூலம் ஏலம் எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். சிஎஸ்கே அணியில் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய அனுபவ வீரர்கள் இல்லை. தோனிக்கும், ஜடேஜாவிற்கும் இடையில் பேட்டிங் செய்ய நல்ல வீரர் இல்லை.

 எடுக்கும்

எடுக்கும்

இதனால் சிஎஸ்கே அணி டிரேடிங் மூலம் தினேஷ் கார்த்திக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இவர் தமிழக வீரர் என்பதாலும், சிஎஸ்கேவில் இவர் மீண்டும் பார்மிற்கு திரும்ப முடியும் என்பதாலும் இவரை அணியில் எடுக்க சிஎஸ்கே ஆலோசித்து வருகிறது என்று கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, January 6, 2021, 17:51 [IST]
Other articles published on Jan 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+