Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினுக்கு நன்றி சொன்ன தினேஷ் கார்த்திக்.. தமிழில் திருப்பி கலாய்த்த அஸ்வின்.. வீடியோ

சிட்னி : டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், தனது அடுத்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி சிட்னி சென்றடைந்துள்ளது.

சிட்னி விமான நிலையத்தில் இந்தியாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 8 ஆண்டகளுக்கு பிறகு டி20 உலககோப்பையில் இந்திய அணி முதல் போட்டியில் வென்று இருக்கிறது.

2016ஆம் ஆண்டு தனது முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோற்ற இந்திய அணி, 2020 ஆம் ஆண்டு டி20 உலககோப்பையில் பாகிஸ்தானிடம் வீழ்ந்தது.

காப்பாற்றிய அஸ்வின்

காப்பாற்றிய அஸ்வின்

இதனை உடைக்கும் விதமாக கடந்த ஞாயிற்றுகிழமை பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. ஆனால் கடைசி கட்டத்தில் 2 பந்தில் 2 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலை இருந்தது. அப்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் அவுட் ஆனார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்ற கொண்ட நிலையில் அஸ்வின் வந்து அணியை காப்பாற்றினார்.

நன்றி சொன்ன கார்த்திக்

நன்றி சொன்ன கார்த்திக்

ஒரு வேலை அன்று இந்தியா தோற்று இருந்தால் தினேஷ் கார்த்திக்கை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பொளந்து கட்டி இருப்பார்கள். ஆனால் நல்லப்படியாக அஸ்வின் வெற்றி யை பெற்று தந்ததால் தினேஷ் கார்த்திக் செய்த தவறை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. இத்னை குறிப்பிடும் விதமாக, விமான நிலையத்தில் அஸ்வினை கட்டுப்பிடித்த சக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், என்னை காப்பாற்றியதற்கு நன்றி என்று கூறினார்.

கலாய்த்த அஸ்வின்

கலாய்த்த அஸ்வின்

இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத அஸ்வின், சுதாரித்து கொண்ட காமெடியாக தமிழில் பேசினார். நான் சொல்லல, தம்பி கருத்தாப் பேசுவாருனு என்று பதில் கூற இருவரும் சிரித்து கொண்டனர். தற்போது இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சிட்னியில் வரும் வியாழக்கிழமை நெதர்லாந்துக்கு எதிரான போட்டி நடைபெறுகிறது.

நெதர்லாந்துடன் அடுத்த போட்டி

இந்தப் போட்டிக்காக இன்று விருப்பமுள்ள வீரர்களுக்கு மட்டும் வலைப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதில் விராட் கோலி மட்டும் பங்கேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். நெதர்லாந்து கத்துக்குட்டி அணியாக கருதப்பட்டாலும், அந்த அணி பேட்டிங்கில் வலுவாக உள்ளதால், அதனை குறைத்து மதிப்பிட முடியாது.

Story first published: Tuesday, October 25, 2022, 19:58 [IST]
Other articles published on Oct 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+