For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிராக்டீஸ் மேட்ச்லயே அதிரடி காட்டிய கேகேஆர் முன்னாள் கேப்டன்... அடி தூள்!

டெல்லி : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, தங்களது அணிக்குள்ளேயே இரு பிரிவாக பிரிந்து பயிற்சி போட்டியில் ஈடுபட்டனர்.

இந்த போட்டியில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடியாக 90 ரன்களை குவித்துள்ளார்.

போட்டியில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் செய்பர்ட் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கேகேஆர் பயிற்சி போட்டி

ஐபிஎல் 2021 தொடருக்காக அனைத்து அணிகளும் மிகவும் சிறப்பாக தங்களை தயார் படுத்தி வருகின்றன. ஆர்சிபி நேற்றைய தினம் தனது பயிற்சிப் போட்டியை நடத்தி முடித்துள்ளது. இதேபோல கேகேஆர் அணியும் அணிக்குள்ளாக பயிற்சி போட்டியை நடத்தியுள்ளது.

கார்த்திக் அதிரடி

கார்த்திக் அதிரடி

டிஒய் படேல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பென் கட்டிங் மற்றும் சுப்மன் கில் தலைமையில் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய சுப்மன் கில் தலைமையிலான அணி 175 ரன்களை குவித்தது. அந்த அணியின் தினேஷ் கார்த்திக் அதிரடியாக 90 ரன்களை குவித்தார்.

அதிரடி வெற்றி

அதிரடி வெற்றி

4வது ஆட்டக்காரராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக், 90 ரன்களை அடித்த நிலையில் இறுதி ஓவரில் சுனில் வாரியர் பந்தில் அவுட்டானார். அடுத்து ஆடிய கட்டிங் தலைமையிலான அணி 7 பந்துகள் மீதமிருந்த நிலையில் அந்த ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் டிம் செய்பர்ட் மிகவும் சிறப்பாக ஆடி, ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.

எஸ்ஆர்எச்சுடன் மோதல்

எஸ்ஆர்எச்சுடன் மோதல்

கடந்த சீசனில் காயமடைந்த அலி கானுக்கு பதிலாக களமிறங்கிய செய்பர்ட், சிறப்பாக செயலாற்றி அந்த அணியில் இந்த சீசனிலும் தொடர்கிறார். இந்த சீசனில் வரும் 11ம் தேதி கேகேஆர் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதவுள்ளது. இதற்கென இரு அணிகளும் சிறப்பாக தயாராகி வருகின்றன.

Story first published: Monday, April 5, 2021, 11:36 [IST]
Other articles published on Apr 5, 2021
English summary
Kolkata Knight Riders will begin their IPL 2021 campaign with a match against Sunrisers Hyderabad on April 11
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+