For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தினேஷ் கார்த்திக் என்றொரு புயல்.. கீப்பிங்கோ.. பேட்டிங்கோ.. விடாமல் போராடும் போராளி!

சென்னை: தினேஷ் கார்த்திக் ஒரு போராளி.. விக்கெட் கீப்பிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி தனி முத்திரை பதித்தவர். எத்தனையோ அவமானங்களையும், அழுத்தங்களையும் சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்து சாதனை படைத்த வித்தியாசமான வீரர்.

Recommended Video

Dinesh Karthik Birthday | Happy Birthday Dinesh Karthik

வீரர்.. என்ற சொல்லுக்கு இவர்தான் சரியான உதாரணம். ஆரம்ப காலத்தில் இவர் சந்தித்த அவமானங்கள் நிறைய. சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கிடைத்தாலும் உடனுக்குடன் தட்டிப் பறிக்கப்பட்டார்.

இப்படியாக போய்க் கொண்டிருந்தாலும் கூட. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது முத்திரையை அழுத்தமாக பதித்து அதிலிருந்து மீண்ட சாதனயைாளர்தான் தினேஷ் கார்த்திக்.

அதிரடி பேட்டிங்

அதிரடி பேட்டிங்

தினேஷ் கார்த்திக் சென்னைக்காரர். அருமையான கீப்பர். அதை விட அதிரடியான பேட்ஸ்மேன். பந்துகளை தைரியமாக சந்தித்து பொளேர் பொளேர் என வெளுத்துக் கட்டுவதில் தனி ஸ்டைலை பின்பற்றியவர். எப்போது பணிக்கு அழைத்தாலும் மின்னல் வேகத்தில் அதை சிறப்பாக செய்யக் கூடியவர். தனது 100 சதவீத அர்ப்பணிப்பைக் கொடுக்கக் கூடியவர்.

தப்புவதும் குறைவு

தப்புவதும் குறைவு

விக்கெட் கீப்பிங்கில் இவர் தவறுகள் செய்தது மிக மிக குறைவு. அதேசமயம் அவரிடமிருந்து தப்பிப் பிழைத்தவர்களும் சிலர்தான். அந்த அளவுக்கு துல்லியமான கீப்பிங் இவருடையது. தோனிக்கே சரியான மிரட்டலாக இருந்தவரும் கூட. கடைசி பந்தில் படு கூலாக சிக்ஸரை விளாசக் கூடிய திரில்லான வீரர் தினேஷ் கார்த்திக். அடுத்த போட்டி அல்லது தொடரில் வாய்ப்பு இல்லை என்றாலும் கூட நடக்கும் போட்டியில் தனது முத்திரையை அழுத்தமாக பதிய வைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடியவர்.

கடும் உழைப்பு

கடும் உழைப்பு

அந்தப் போட்டியை முடிந்தவரை வென்றெடுக்க தனது உழைப்பைக் கொட்டக் கூடியவர். இவரிடம் இருக்கும் அந்த டெடிகேஷன் பலரிடமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வீரர்களை மோட்டிவேட் செய்வதிலாகட்டும்.. அவர்களுக்கு டிப்ஸ் கொடுத்து ஊக்குவிப்பதிலும் சரி தினேஷுக்கு நிகர் தினேஷ்தான். சர்வதேச டி20 போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது பெற்ற முதல் இந்திய வீரர் இவர்தான்.

பிறந்த நாள்

பிறந்த நாள்

இன்று தனது 35வது பிறந்த நாளை சிம்பிளாக கொண்டாடுகிறார் தினேஷ் கார்த்திக். விழுந்த அடிகளையம் காயங்களையும் விழுப்புண்களாக மாற்றி அசத்தியவர் தினேஷ். கங்குலி காலத்தில் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக அறிமுகம் செய்யப்பட்டவர் தினேஷ் கார்த்திக். ஆனால் தோனியின் வரவு தினேஷ் கார்த்திக்கை முடக்கிப் போட்டு விட்டது. அதன் பிறகு அவர் எழுவது என்பது மிகப் பெரிய காரியமாகிப் போனது.

தோனிக்கு சீனியர்

தோனிக்கு சீனியர்

அப்போது தன்னை நிரூபிக்க அவருக்குக் கிடைத்த அருமையான வரமாக ஐபிஎல் அமைந்தது. ஐபிஎல்லில் தனது அதிரடியைக் காட்டி அனைவரையும் மிரள வைத்து இந்திய அணிக்குள் மீண்டும் நுழைந்து முத்திரை பதித்தார். கிடைத்த சின்னச் சின்ன வாய்ப்புகளையும் கூட அருமையாக பயன்படுத்திக் கொள்ளக் கூடியவர் தினேஷ் கார்த்திக். அதிகம் பேசாமல் கிளவுஸையும், பேட்டையும் வைத்து பேச விட்டவர் தினேஷ் கார்த்திக். ஜென்டில்மேன் வீரராக அறியப்படும் தினேஷ் கார்த்திக்குக்கு அவரது பிறந்த நாளையொட்டி வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நாமும் வாழ்த்துவோம்.

Story first published: Monday, June 1, 2020, 12:01 [IST]
Other articles published on Jun 1, 2020
English summary
Dinesh Karthik has turned 35 years today
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X