சொதப்பிய தினேஷ் கார்த்திக்.. இனி வாய்ப்பே கிடையாது.. அந்த இளம் வீரருக்கு தான் வாய்ப்பு!
Recommended Video
மும்பை : தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு இல்லை, என்றும் அவருக்கு பதில் இந்திய அணியில் வேறு ஒரு வீரருக்கு இனி வாய்ப்பு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
இந்தியா அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க உள்ளது. உலகக்கோப்பை அணியில் இடம் பெற்ற வீரர்களில் சிலருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காது என கூறப்படும் நிலையில், அதில் முதல் ஆளாக தினேஷ் கார்த்திக் இருக்கிறார்.

தினேஷ் கார்த்திக் சொதப்பல்
உலகக்கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக் மூன்று போட்டிகளில் இடம் பெற்று அதில் இரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு பெற்றார். ஆனால், இரண்டு முறையுமே சொதப்பினார். முதலில் லீக் சுற்றில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

அரையிறுதி ஆட்டம்
இரண்டாவதாக அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 5 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தவித்த போது களமிறங்கினார். அப்போது தினேஷ் கார்த்திக் நிலைத்து ஆடி இருந்தால், இந்திய அணி வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால், 25 பந்துகளை சந்தித்து 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

வாய்ப்பு இல்லை
இதை அடுத்து தினேஷ் கார்த்திக்கிற்கு இனி இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்து வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அவர் இடம் பெறமாட்டார்.

கடினம்
இந்திய அணி 2023 உலகக்கோப்பையை மனதில் வைத்து இனி இளம் வீரர்களுக்குத் தான் அதிக வாய்ப்பு தரும் என்பதால் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இனி இடம் பிடிப்பது கடினம் தான்.

உள்ளே ஸ்ரேயாஸ் ஐயர்
அவருக்கு பதில் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய ஸ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கேப்டனாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications