
ஆபத்து இல்லை
நிலைமை இப்படி இருக்க, ஐசிசி மருத்துவர் ஒருவர் பும்ரா தொடர்பாக அளித்துள்ள பேட்டி தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பாக ஐசிசி மருத்துவ குழு கமிட்டி உறுப்பினர் டாக்டர் தின்ஷா அளித்துள்ள பேட்டியில், பும்ராவுக்கு ஏற்பட்டிருக்கும் காயம் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையை புரட்டிப் போடும் அளவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

ஓய்வு வேண்டும்
நன்றாக ஓய்வெடுத்து பயிற்சி மேற்கொண்டால் நீங்கள் பழைய மாதிரி பந்து வீசலாம். ஆனால் இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் காயத்திலிருந்து குணமடைய நீண்ட காலம் ஆகும். இதற்கு அறுவை சிகிச்சை செய்ய தேவையில்லை. இதனால் காயம் ஆறுவதற்கு நீங்கள் நேரம் கொடுக்க வேண்டும். முழு உடல் தகுதி எட்டிய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் பயிற்சியை தொடங்கி பழைய மாதிரி பந்து வீச முடியும்.

வலி மாத்திரை
பும்ராவுக்கு எந்தவிதமான காயம் ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்து பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் டி20 உலக கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்றால் நீங்கள் வலி நிவாரண மாத்திரையை பயன்படுத்தி கொண்டு நீங்கள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கலாம். ஆனால் இது சரியான வழி கிடையாது. பும்ரா விஷயத்தில் இந்திய அணி பொறுமை காக்க வேண்டும்.

அறுவை சிகிச்சை வேண்டாம்
சில வீரர்கள் வலி நிவாரண மாத்திரையை உட்கொண்டு போட்டியில் விளையாடி இருக்கின்றனர். ஆனால் உங்களால் பழைய மாதிரி பந்து வீச முடியாது. மேலும் காயம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் நீங்கள் பொறுமை காப்பதே அவசியம். இந்த காயத்திற்கு ஓய்வு மட்டுமே மருந்து அறுவை சிகிச்சை கிடையாது என்றும் மருத்துவர் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications