
கடைசி போட்டி
1948ஆம் ஆண்டு ஆஷஸ் தொடர். இங்கிலாந்தை புரட்டி எடுத்த ஆஸ்திரேலியா 3 - 0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. கடைசி டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் மோதின. அது தான் டான் பிராட்மேனின் கடைசி போட்டி.

ஆஸ்திரேலியா பேட்டிங்
அந்தப் போட்டி ஆகஸ்ட் 14, 1948 அன்று தொடங்கியது. அதே நாளில் இங்கிலாந்து அணி 52 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலியா பேட்டிங் ஆட வந்தது. துவக்க வீரர்கள் 117 ரன்கள் சேர்த்தனர். அடுத்து பிராட்மேன் களம் கண்டார்.

பெரிய அதிர்ச்சி
பலத்த வரவேற்புக்கு இடையே பேட்டிங் செய்ய வந்த அவர் இரண்டாவது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அது பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆட வேண்டிய நிலையும் ஏற்படவில்லை.

அதை தவறவிட்டார்
தன் கடைசி போட்டியில் ஆகஸ்ட் 14 அன்று டக் அவுட் ஆன பிராட்மேன் டெஸ்ட் பேட்டிங் சராசரியாக 100 என்ற மைல்கல்லை பதிக்கத் தவறினார். டக் அவுட் ஆனதால் 100க்கும் மேல் இருந்த அவரது சராசரி சரிந்து, 99.94 என்பதோடு நின்றது.

சச்சின் ஆடிய போட்டி
சுமார் 42 ஆண்டுகள் கழித்து 19 வயது சச்சின் அதே இங்கிலாந்து அணியை எதிர்த்து ஆடினார். முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று இரண்டாம் டெஸ்ட்டை கைப்பற்றி தொடரை வெல்ல ஆவலாக இருந்தது. இரண்டாம் டெஸ்டின் கடைசி நாளில் இந்தியா 408 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலை.

முதல் சதம்
அந்த டெஸ்டின் கடைசி நாள் ஆகஸ்ட் 14. இந்தியா விக்கெட்களை இழந்து கொண்டே வர சச்சின் மட்டும் களத்தில் நீடித்து நின்றார். வெற்றி என்பது எட்டக்கனியாகி விட்டாலும் போட்டியை டிரா செய்ய முயற்சித்தது இந்தியா. போட்டியை டிரா செய்யும் கடின முயற்சியில் 19 வயது சச்சின் தன் முதல் சதம் அடித்தார்.

பெரிய மைல்கல் சாதனை
ஆகஸ்ட் 14 அன்று தன் முதல் சதம் அடித்த சச்சின் பின்னர் 100 சதங்கள் அடித்து கிரிக்கெட்டில் பெரிய மைல்கல்லை எட்டினார். கிரிக்கெட்டின் இரு ஜாம்பவான்களும் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தாலும் ஆகஸ்ட் 14 ஏதோ ஒரு வகையில் அவர்களை இணைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











