Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதுதான் முடிஞ்சு போச்சே..! சும்மா அதையே ஏன் கேட்டு கடுப்படிக்கிறீங்க..! டென்ஷன் கோலி

Recommended Video

Rohit Vs Kohli : மோதலுக்கு முடிவுகட்ட பிசிசிஐ புது திட்டம்- வீடியோ

மும்பை: உலக கோப்பை தொடர் முடிந்து இத்தனை நாட்களாகி விட்ட பின்னரும் அதை பற்றி பேச வேண்டாம் என்று கோலி கூறியிருக்கிறார்.

உலக கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட சென்றுள்ளது. உலக கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய அணி விளையாடும் முக்கிய தொடராகும்.

இந்த தொடர் குறித்தும், வீரர்கள் தேர்வும் குறித்து பல கேள்விகள் எழுந்தன. அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி குறித்தும் விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில் உலக கோப்பை தோல்வி பற்றியே பேச வேண்டாம் என்று கேப்டன் கோலி கூறியிருக்கிறார்.

துவக்க ஆட்டக்காரர்கள்

துவக்க ஆட்டக்காரர்கள்

அவர் கூறியிருப்பதாவது: இந்திய அணியில் முதல் 3 துவக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாகவே ஆடிவருகின்றனர். அவர்கள் சிறப்பாக ஆடும் போது மிடில் ஆர்டரில் இறங்கும் எந்த வீரருக்கும் அழுத்தம் ஏற்படவில்லை.

அது போதும்

அது போதும்

துவக்க வீரர்கள் சொதப்பும் போது தான், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆடும் சூழல் உருவாகிறது. அந்த தருணத்தில் அவர்கள் சரியாக ஆடினாலே போதுமானது.

பேச வேண்டாம்

பேச வேண்டாம்

அணி தேர்வில், பல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறோம். அதன் முடிவுகள் இனி வரக்கூடிய போட்டிகளில் தெரியும். தொடர்ந்து அதையே யாரும் திரும்ப, திரும்ப சொல்லிக் காட்ட வேண்டாம். பொறுமையாக இனி நடக்கும் என்பதை பாருங்கள் என்று கூறினார்.

நீக்க வேண்டும்

நீக்க வேண்டும்

உலக கோப்பை தொடரில் சரியாக விளையாடாத கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் நீக்கப்பட்டனர். அதை போலவே சரியாக செயல் படாத கேப்டன் கோலியின் கேப்டன்ஷிப்பை பறிக்க வேண்டும் என்றும் முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் கூறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, July 31, 2019, 13:46 [IST]
Other articles published on Jul 31, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+