Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அணிக்காக ஆடுங்கள், சுய நலத்தோடு விளையாடாதீர்கள்.. யாரை சொல்கிறார் இஷாந்த் ஷர்மா?

ஆன்டிகுவா: சுய நலத்தை புறம் தள்ளிவிட்டு அணி நலனை முன்னிறுத்தி ஆட வேண்டும் என்று சக இந்திய வீரர்களுக்கு வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா அட்வைஸ் கொடுத்துள்ளார்.

4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளது.

17 பேர் கொண்ட இந்திய அணியில், கேப்டன் விராட் கோஹ்லி, முரளி விஜய், இஷாந்த் ஷர்மா, அமித் மிஸ்ரா ஆகிய நால்வர் மட்டுமே இதற்கு முன்பு கரீபியனில் ஆடி அனுபவம் உள்ளவர்கள்.

தொடர் நாயகன்

தொடர் நாயகன்

இதற்கு முன்பு 2001ல் மே.இ.தீவுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் வென்றது. அப்போது இஷாந்த் ஷர்மா 22 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

பொறுப்புமிக்கவர்

பொறுப்புமிக்கவர்

எனவே, இம்முறையும் இஷாந்த் ஷர்மா மீது இந்திய அணி நிர்வாகம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. இந்திய பவுலிங் பிரிவை தலைமையேற்று வழி நடத்தும் பொறுப்பு இஷாந்த்துக்கே உள்ளது.

கும்ப்ளே பாராட்டு

கும்ப்ளே பாராட்டு

68 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, 201 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள, 27 வயதாகும் இஷாந்த் ஷர்மாதான், இந்திய அணியின் பவுலிங் அட்டாக் நம்பிக்கை நட்சத்திரம் என்று தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளேயும் சமீபத்தில் சர்டிபிகேட் கொடுத்தார்.

சுய லாபம்

சுய லாபம்

இந்நிலையில், பிசிசிஐ டிவிக்கு, இஷாந்த் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களது சுய சாதனைக்காக ஆடக்கூடாது.

அணி முக்கியம்

அணி முக்கியம்

அணியின் வெற்றியை நோக்கியே வீரர்கள் குறி இருக்க வேண்டும். ஆடும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே அணி வீரர்கள் இலக்காக இருக்க வேண்டும்.

சாதனை தேடிவரும்

சாதனை தேடிவரும்

அணிக்காக விளையாடினால் சாதனைகள் தானே தேடி வரும். மைதானம் உங்களுக்கு கை கொடுக்காவிட்டாலும், நமது நிலைமையை மாற்றிக்கொள்ள கூடாது. எப்போதும் அட்டாக்கிங் சிந்தனையிலேயே பந்து வீச்சாளர்கள் இருக்க வேண்டும். இவ்வாறு இஷாந்த் ஷர்மா தெரிவித்தார்.

Story first published: Tuesday, July 12, 2016, 12:47 [IST]
Other articles published on Jul 12, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+