Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகனே..!! வாழ்க்கையில இந்த தப்பை மட்டும் பண்ணிராதே...!! மகனுக்கு அட்வைஸ் செய்த அந்த ஜாம்பவான்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் தமது மகன் அர்ஜூனுக்கு சில அறிவுரைகளை கூறி இருக்கிறார்.

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மாபெரும் கிரிக்கெட் வீரர். கிரிக்கெட் உலகில் காலத்தால் அழியாத வரலாறுகளை படைத்த அவர், 24 ஆண்டுகள் அசைக்க முடியாத ஜாம்பவானாக வலம்வந்தவர்.

Dont choose any shortcut way in life, sachin says to his son

அதிக சதங்கள், அதிக ரன்கள் என அவருக்கு சொந்தமான சாதனைகள் ஏராளம். இந்திய அணியின் மிக பெரிய தூண். சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் கிரிக்கெட் வீரராகவே உருவெடுத்துள்ளார். மும்பை டி 20 லீக் தொடரில் ஆகாஷ் டைகர்ஸ் அணிக்காக அவர் ஆடிவருகிறார்.

பொதுவாக கிரிக்கெட் வீரர்களின் வாரிசுகளும் கிரிக்கெட் வீரராக இருந்தால் அணியில் எளிதாக வாய்ப்பு கிடைத்துவிடும். மற்ற வீரர்களின் வாரிசுகளுக்கே அப்படியென்றால், சச்சின் டெண்டுல்கரின் மகன் என்றால் சொல்லவா வேண்டும். ஆனால், அந்த கருத்துகளை தகர்க்கும் வகையில் இருக்கிறது சச்சினின் நடவடிக்கைகள்.

தமது மகனுக்கு அவர் சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். அதுபற்றி சச்சின் கூறியிருப்பதாவது: கிரிக்கெட் விளையாடியே ஆக வேண்டும் என்று தனது மகனை வற்புறுத்தியதில்லை. மேலும், வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் குறுக்கு வழியை மட்டும் தேர்வு செய்து விடக் கூடாது.

எனக்கு தனது தந்தை கூறிய அறிவுரையாகும். இதே அறிவுரையை தற்போது எனது மகனுக்கு சொல்லி இருக்கிறேன். கடுமையாக உழைத்தால் அதற்கேற்ற பலன் கிடைத்தே தீரும் என்று மகனிடம் கூறி இருப்பதாகவும் சச்சின் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, May 28, 2019, 10:41 [IST]
Other articles published on May 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+