Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேதர் ஜாதவை எடுத்திருந்தால் பலமாக இருந்திருக்கும்...கொல்கத்தா பேட்டிங் வரிசையில் குறை சொன்ன கம்பீர்

சென்னை: கொல்கத்தா அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்து முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் குறை கூறியுள்ளார்.

14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெறவிருக்கிறது. இதற்கான வீரர்களை சமீபத்தில் அணிகள் ஏலம் எடுத்தன.

இந்நிலையில் கொல்கத்தா அணியில் எடுத்துள்ள வீரர்கள் குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் குறை கூறியுள்ளார்.

ஏலம்

ஏலம்

ஐபிஎல்-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2014 மற்றும் 2016 என 2 முறை கோப்பையை வென்றுள்ளது. இந்த முறை பென் கட்டிங், ஹர்பஜன் சிங், சகிப் அல் ஹசன், கருண் நாயர், ஷெல்டன் ஜாக்சன், வைபவ் அரோரா ஆகியோரை ஏலம் எடுத்துள்ளது.

குறை

குறை

தற்போதைய கொல்கத்தா அணியில் இந்திய வீரர்களின் பேட்டிங் வரிசை சரியில்லை என கம்பீர் தெரிவித்துள்ளார். சுப்மன் கில், நிதிஷ் ரானா தவிர வேறு நல்ல பேட்ஸ்மேன்களை அணியில் பார்க்க முடியவில்லை. தினேஷ் கார்த்திக் சரியான ஃபார்மில் இல்லை. என தெரிவித்துள்ளார்.

கேதர் ஜாதவ் வேண்டும்

கேதர் ஜாதவ் வேண்டும்

அணியில் மிடில் ஆர்டரில் அனுபவம் வாய்ந்த இந்திய வீரராக கருண் நாயர் உள்ளார். ஆனால் அவர் டாப் ஆர்டருக்கே பொறுத்தமாக இருப்பார். இதனால் அவருக்கு பதிலாக கேதர் ஜாதவ் போன்ற வீரரை எடுத்திருந்தால் மிடில் ஆர்டர் இன்னும் பலமாக இருந்திருக்கும்.

 வீரர்களின் தேவை

வீரர்களின் தேவை

இந்திய வீரர்களின் பேட்டிங் வரிசையில் பிழை இருப்பதால் அயல்நாட்டு வீரர்களையே கொல்கத்தா நம்பி இருக்கும். சுனில் நரேனை ஓப்பனிங் ஆட வைத்தால் சரியாக இருக்குமா? ஏனெனில் மார்கன், ரஸ்ஸல் போன்றோர் மிடில் ஆர்டரில் உள்ளனர். என தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, February 21, 2021, 8:17 [IST]
Other articles published on Feb 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+