மெல்போர்ன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியின்மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் போட்டியில் களமிறங்கி விளையாடி வருகிறார் பௌலர் முகமது சிராஜ்.

இந்நிலையில் அணியின் மூத்த வீரர் ஜஸ்பிரீத் பும்ரா களத்தில் எதையும் வித்தியாசமாக முயற்சிக்க வேண்டாம் என்று தனக்கு அறிவுறுத்தியதாக சிராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் தற்போது மெல்போர்னில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் போட்டியில் விளையாடி வருகிறார் முகமது சிராஜ். இந்திய அணியின் நம்பிக்கை தரும் புதிய வரவான அவர், இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், அணியின் மூத்த வீரர் ஜஸ்பிரீத் பும்ரா எதையும் வித்தியாசமாக களத்தில் முயற்சிக்க வேண்டாம் என்று தனக்கு அறிவுறுத்தியதாக சிராஜ் தெரிவித்துள்ளார். ஒரு நிலையில் பௌலிங் செய்யவும், டாட் பந்துகளை கொண்டு எதிரணியினருக்கு நெருக்கடி கொடுக்கவும் அவர் ஆலோசனை வழங்கியதாகவும் சிராஜ் மேலும் கூறினார். வீசும் ஒவ்வொரு பந்திலும் சமமான கவனத்தை செலுத்தவும் பும்ரா அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.