Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இரண்டே நாள் இடைவெளி தான்.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு டபுள் விருந்து.. டி20 உலகக்கோப்பை தேதி வெளியானது

மும்பை: ஐபிஎல் தொடருக்காக டி20 உலகக்கோப்பை தொடர் தேதிகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது ஐசிசி அமைப்பு.

கடந்த 2020ம் ஆண்டு நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை தொடர் கொரோனா காரணமாக 2021ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தொடர் தொடங்கும் தேதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடர்

டி20 உலகக்கோப்பை தொடர்

இந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் தான் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் தொடரை அங்கு நடத்தலாமா என்பதில் சந்தேகம் நிலவி வந்தது. பிசிசிஐ பதிலளிக்க ஜூன் 27ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்தது ஐசிசி. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போட்டி விவரங்கள்

போட்டி விவரங்கள்

டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளது. அதன்படி தகுதிச்சுற்று ஆட்டங்கள் அனைத்தும் ஓமனில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் அக்டோபர் 17ம் தேதி முதல் அக்டோபர் 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன் பிறகு சூப்பர் 12 பிரிவு ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளது. இதற்காக அங்குள்ள 3 மைதானங்களும் தயார் படுத்தப்படவுள்ளன.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

முன்னதாக இந்தியாவில் கொரோனா காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் செப்.19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே ஐபிஎல் போட்டிகள் முடிந்த அடுத்த 2 நாட்களில் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. ஐபிஎல்-ல் பங்கேற்கும் வீரர்கள் ஏற்கனவே பயோ பபுளில் அங்கு பாதுகாப்புடன் இருப்பார்கள் என்பதால் டி20 உலகக்கோப்பை தொடரை அதற்கு ஏற்றார் போல் ஏற்பாடு செய்துள்ளது ஐசிசி.

டபுள் விருந்து

டபுள் விருந்து

செப்டம்பர் மாதம் வரை டெஸ்ட் தொடரை மட்டுமே பார்க்கவிருக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு செப்டம்பர் 19ம் தேதி முதல் ஐபிஎல் டி20 போட்டிகள் விருந்துபடைக்கவுள்ளன. இந்த தொடர் முடிந்த இரண்டே நாட்களில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. எனவே இனி கிரிக்கெட் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து காத்துள்ளது.

Story first published: Saturday, June 26, 2021, 14:51 [IST]
Other articles published on Jun 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+