Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிராவிட் போட்ட அட்டகாச திட்டம்.. டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி செய்யும் குழப்பம்.. இதை கவனியுங்கள்

நாட்டிங்கம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி அட்டகாச ப்ளானுடன் களமிறங்கியுள்ளது.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி நாட்டிங்கம் மைதானத்தில் தொடங்கியுள்ளது.

இந்த தொடரை ஏற்கனவே 2 வெற்றிகளுடன் கைப்பற்றி விட்ட இந்திய அணி வைட் வாஷ் செய்ய வேண்டும் என முணைப்புடன் உள்ளது.

அணி மாற்றம்

அணி மாற்றம்

இந்த போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11ல் பெரும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், யுவேந்திர சாஹல் ஆகிய முக்கிய வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தொடரை கைப்பற்றிய போதும், பயிற்சியின் அடிப்படையில் அவர்களை ஆட வைத்திருக்க வேண்டும்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

ஆனால் அவர்களுக்கு மாற்றாக இளம் வீரர்கள் தீபக் ஹூடா, ரவி பிஷ்னாய், ஆவேஷ் கான், உம்ரான் மாலிக் அகிய வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அயர்லாந்து தொடரில் கலக்கிய இந்த வீரர்கள், இங்கி, தொடரில் இன்னும் ஒரு வாய்ப்பு கூட பெறவில்லை. ஆனால் இவர்களை களமிறக்கியதற்கு மற்றொரு முக்கிய காரணம் உண்டு.

டிராவிட் திட்டம்

டிராவிட் திட்டம்

டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியை உருவாக்குவதில் 30 வீரர்கள் வரை டிராவிட் தேர்வு செய்து வைத்துள்ளதாக தெரிகிறது. இதில் டாப் வீரர்களுக்கு அடிக்கடி வாய்ப்புகளை தந்துவிட்டு, இடையிடையே இளம் வீரர்களை பயன்படுத்தி அணியின் காம்பினேஷனை டிராவிட் முயற்சித்து வருகிறார்.

என்ன காரணம்

என்ன காரணம்

உலகக்கோப்பையின் போது, ஒரே ஃபார்முலா கொண்ட அணியை எதிரணிகள் சுலபமாக கணித்துவிடும். எனவே அந்த காம்போவை எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைக்கப்பட்டு குழப்பப்படும் என்பதை டிராவிட் நிரூபித்து வருகிறார். இதற்கு பெரும் சான்று ரிஷப் பண்ட் ஓப்பனிங் ஆடி வருவது தான்.

ரோகித்தின் விளக்கம்

ரோகித்தின் விளக்கம்

இதுகுறித்து ஏற்கனவே பேசியிருந்த கேப்டன் ரோகித் சர்மா, இந்திய அணியில் பெஞ்சில் அமர்ந்துள்ள வீரர்களுக்கும் வாய்ப்பு தரப்படும். கிடைக்கும் அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்த விரும்புகிறோம். எனவே அதற்கேற்றார் போலவே நடவடிக்கைகள் இருக்கும் என தெரிவித்திருந்தார்.

Story first published: Sunday, July 10, 2022, 20:22 [IST]
Other articles published on Jul 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+