Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிராவிட் கிட்ட இருந்து கத்துக்குங்க பண்டியா.. ட்விட்டரில் ட்ரென்ட் ஆகும் டிராவிட் வீடியோ

Recommended Video

டிராவிட்டிடம் கற்றுக்கொள்ளுங்கள் பாண்டியா! ட்ரென்ட் ஆகும் வீடியோ

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பண்டியா பெண்கள் குறித்தும், தன் பார்ட்டி முறை வாழ்க்கையில் நடந்து கொள்ளும் விதம் பற்றியும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசி சிக்கலில் மாட்டி உள்ளார்.

இந்த நேரத்தில், டிராவிட் எத்தனை நேர்மையானவர், கண்ணியமானவர் என்பதை உலகுக்கு காட்டிய ஒரு பிராங்க் வீடியோ ட்விட்டரில் ட்ரென்ட் ஆகி வருகிறது.

டிராவிட் வீடியோ

பண்டியா போன்ற வீரர்கள் டிராவிட்டை பார்த்து பொது வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என கற்றுக் கொள்ள வேண்டும் என கூறி வருகிறார்கள் ரசிகர்கள். அது என்ன பிராங்க் வீடியோ?

திருமணம் செய்ய வற்புறுத்தல்

திருமணம் செய்ய வற்புறுத்தல்

எம்டிவி பக்ரா என்ற நிகழ்ச்சிக்காக 2010இல் டிராவிட்டை பேட்டி எடுக்க வந்தார் சிங்கப்பூரை சேர்ந்த சாயாலி பகத் என்ற பத்திரிக்கையாளர். பேட்டி எடுத்து முடித்த உடன் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என கேட்டு, ஒப்புக் கொள்ளுமாறு டிராவிட்டை வற்புறுத்தினார் அந்த பெண்.

மனதை மாத்திக்குங்க

மனதை மாத்திக்குங்க

டிராவிட் அந்த நேரத்தில் மிக நிதானமாக இருந்தார். அந்த பெண்ணிடம் மனதை மாற்றிக் கொள்ளுமாறு கூறினார். அவர் கேட்கவில்லை. அப்போது அந்த பெண்ணின் தந்தையும் உள்ளே வந்து டிராவிட்டை தன் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார்.

கண்ணியம் மிக்க டிராவிட்

கண்ணியம் மிக்க டிராவிட்

ஒரு கட்டத்தில் டிராவிட் தான் ஒரு வலையில் சிக்கி விட்டோம் என்பது போல உணர்ந்தார். டிராவிட் அந்த சந்தர்ப்பத்தில் கூட கோபப்படாமல் பொறுமையாக, கண்ணியமாக நடந்து கொண்டார்.

கோபம் இல்லை

கோபம் இல்லை

ஒரு கட்டத்தில் அந்த இடத்தை விட்டு டிராவிட் விலக முயன்ற போது தான் அந்த பெண்ணும், அவர் தந்தையாக வந்தவரும் இது எல்லாமே ஒரு பிராங்க் என அவருக்கு கூறினார்கள். அப்போதும் டிராவிட் கோபப்படவில்லை.

இது ஒரு பாடம்

இது ஒரு பாடம்

ஒரு பிரபலம் பொது வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு டிராவிட்டை வலையில் சிக்க வைக்க முயன்ற இந்த பிராங்க் வீடியோ ஒரு பாடமாகவே இருந்தது எனலாம். இன்று ஹர்திக் பண்டியாவின் சர்ச்சை பேச்சுக்கள் அவருக்கு பெரிய தலைவலியாக மாறி உள்ள நிலையில், டிராவிட் இது போன்ற பிரபலங்களுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என கற்றுத் தரும் அகராதியாக இருக்கிறார்.

பண்டியா மதிப்பு போச்சே

பண்டியா மதிப்பு போச்சே

பண்டியா தான் பல பெண்களுடன் சுற்றியதை பற்றி பெருமையாக பேசி இருப்பதும், தான் பெண்களுடன் ஜாலியாக இருப்பதை பெற்றோரிடம் கூறுவேன் எனக் கூறி இருப்பதும் அவரின் மீது இருக்கும் மதிப்பை குறைத்துள்ளதோடு, அவர் சார்ந்த பிசிசிஐ அமைப்புக்கும் சிக்கலாக அமைந்துள்ளது. தற்போது தனக்கு எத்தனை போட்டிகளுக்கு தடை விதிக்கப்படும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கிறார் பண்டியா.

மரியாதை தான் முக்கியம்

மரியாதை தான் முக்கியம்

இன்றைய இன்டர்நெட் யுகத்தில் பிரபலம் ஆவது மிக எளிது. டிராவிட் போல மரியாதையை சம்பாதிப்பது மிகவும் கடினம். இன்று (ஜனவரி 11) தன் 46வது பிறந்த நாளை கொண்டாடும் டிராவிடுக்கு நம் பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வோம்!!

இந்தியாவின் தடுப்புச் சுவர் டிராவிட்டின் தொட முடியாத சாதனைகள் பட்டியல் #HappyBirthdayDravid

Story first published: Friday, January 11, 2019, 18:14 [IST]
Other articles published on Jan 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+