வயசானாலும் உங்க சாதனைகள் உங்களை விட்டுப் போகலையே டிராவிட்! #HappyBirthdayDravid

பெங்களூர் : ராகுல் டிராவிட் இன்று தன் 46வது வயதில் அடி எடுத்து வைத்துள்ளார். இந்தியாவின் தடுப்புச் சுவர் என அறியப்படும் ராகுல் டிராவிட்டுக்கு இன்றும் ரசிகர்கள் உண்டு. என்றும் இருப்பார்கள்.

ஆனால், அப்படி என்ன தான் செய்து விட்டார் டிராவிட்? சச்சின் இருந்த காலத்திலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை எப்படி உருவாக்கினார் டிராவிட்?

டிராவிட்டின் நல்ல குணங்கள்

டிராவிட்டின் நல்ல குணங்கள்

டிராவிட் எளிமை, அமைதி, நிதானம், தெளிவு போன்ற நல்ல குணங்களை தன் அடிப்படையாக கொண்டு இருந்தார். இதுவே டிராவிட் மீது தனி மரியாதையை ஏற்படுத்தியது. ஆனால், அதே சமயம் டிராவிட் களத்தில் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கினார். சிறந்த ஃபீல்டராகவும் விளங்கினார்.

முறியடிக்கப்படாத சாதனைகள்

முறியடிக்கப்படாத சாதனைகள்

இன்று பயிற்சியில் இளம் இந்திய வீரர்கள் பலரை பட்டை தீட்டி இந்திய அணிக்கு அனுப்பி வைக்கும் வேலையை சத்தமில்லாமல் செய்து வருகிறார். அவர் ஓய்வு பெற்று பல ஆண்டுகளாகியும் முறியடிக்கப்படாத சாதனைகள் இன்னும் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.

அதிக கேட்ச்கள்

அதிக கேட்ச்கள்

டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச்கள் பிடித்த வீரர் என்ற சாதனை இன்னும் டிராவிட் வசம் தான் உள்ளது. டிராவிட் டெஸ்ட் போட்டிகளில் ஸ்லிப் ஃபீல்டிங்கில் திறமை வாய்ந்தவராக திகழ்ந்தார். டெஸ்ட் போட்டிகளில் 210 கேட்ச்கள் பிடித்துள்ளார் டிராவிட், விக்கெட் கீப்பர்களை தவிர்த்து, அதிக கேட்ச்கள் பிடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

4 இன்னிங்க்ஸ்களில் 4 சதம்

4 இன்னிங்க்ஸ்களில் 4 சதம்

டெஸ்ட் போட்டிகளில் நான்கு இன்னிங்க்ஸ்களில் நான்கு சதம் அடித்த சாதனை டிராவிட் வசமே உள்ளது. முதல் மூன்று சதங்கள் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், நான்காவது சதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் அடித்தார்.

பார்ட்னர்ஷிப் சாதனைகள்

பார்ட்னர்ஷிப் சாதனைகள்

டிராவிட் டெஸ்ட் போட்டிகளில் பார்ட்னர்ஷிப் போட்டு ரன் எடுப்பதில் வல்லவர். சுமார் 88 முறை 100+ பார்ட்னர்ஷிப்களை அமைத்துள்ளார். இதுவே இன்று வரை அதிகம். மேலும் 126 முறை 50+ பார்ட்னர்ஷிப்கள் அமைத்துள்ளார்.

அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள்

அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள்

அதிலும், சச்சினுடன் மட்டும் 20 முறை 100+ பார்ட்னர்ஷிப்கள் அமைத்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து 6920 ரன்கள் எடுத்துள்ளனர், இதுவும் உலக சாதனையே! மேலும், டிராவிட் மற்ற வீரர்களுடன் சேர்ந்து 32,039 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளார்.

தொடர்ந்து 90 டெஸ்ட் போட்டிகள்

தொடர்ந்து 90 டெஸ்ட் போட்டிகள்

டெஸ்ட் போட்டிகளில் மூன்றாம் இடத்தில் களமிறங்கி 10,000 ரன்களை எடுத்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமை டிராவிட் வசமே உள்ளது. அதே போல தொடர்ந்து 90 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ஒரே வீரர் டிராவிட் மட்டுமே. தன் அறிமுக டெஸ்டில் இருந்து இந்தியா அடுத்து ஆடிய 90 டெஸ்ட் போட்டிகளில் டிராவிட் இடம் பெற்றார்.

டெஸ்டில் அதிக பந்துகள்

டெஸ்டில் அதிக பந்துகள்

டெஸ்ட் போட்டிகளில் அதிக பந்துகள் சந்தித்த வீரர் என்ற சாதனை டிராவிட் வசம் உள்ளது. டிராவிட் டெஸ்டில் மட்டும் 31,258 பந்துகள் சந்தித்துள்ளார். அது மட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளில் 735 மணி நேரம், 52 நிமிடங்கள் களத்தில் பேட்டிங் செய்துள்ளார். இது இரண்டும் டிராவிட் ஏன் சிறந்த டெஸ்ட் வீரர் என கொண்டாடப்படுகிறார் என்பதற்கு சான்று.

அனைத்து நாடுகளிலும் சதம்

அனைத்து நாடுகளிலும் சதம்

டிராவிட் தான் முதன் முதலில் 10 டெஸ்ட் போட்டிகள் ஆடும் நாடுகளில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றவர். டெஸ்ட் பேட்ஸ்மேன் என அறியப்பட்டாலும், ஒருநாள் போட்டிகளிலும் டிராவிட் பல சாதனைகள் செய்துள்ளார்.

22 பந்துகளில் 50

22 பந்துகளில் 50

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் அடித்த இந்தியர்களில் டிராவிட் இரண்டாம் இடத்தில் சேவாக், கபில் தேவ் ஆகியோருடன் இடம் பெற்றுள்ளார். 2003இல் நியூசிலாந்து அணிக்கு எதிராக 22 பந்துகளில் அரைசதம் அடித்தார் டிராவிட். இன்று பல அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தும் இந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படாமல் உள்ளது ஆச்சரியமே!

டக் அவுட் சாதனை

டக் அவுட் சாதனை

டிராவிட் டக் அவுட் ஆகாமல் சுமார் 120 ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து ஆடியுள்ளார். இது டிராவிட் ஒருநாள் போட்டிகளில் எத்தகைய நம்பகமான பேட்ஸ்மேன் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

300+ பார்ட்னர்ஷிப்

300+ பார்ட்னர்ஷிப்

ஒருநாள் போட்டிகளில் 2 முறை 300 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளார் டிராவிட். இந்த சாதனை இன்று வரை யாராலும் நெருங்க முடியாத ஒன்றாகவே உள்ளது.

டிராவிட் ஒரு பாடம்

டிராவிட் ஒரு பாடம்

தற்போதைய பேட்ஸ்மேன்கள் டி20 யுகத்தில் டெஸ்ட் போட்டிகளில் கூட அதிரடி காட்ட வேண்டும் என நினைக்கிறார்கள். புஜாரா போன்ற ஒரு சிலர் மட்டுமே டெஸ்ட் பேட்டிங்கின் நுணுக்கத்தை அறிந்து பேட்டிங் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இனி வரும் காலத்தில் டிராவிட்டின் பல டெஸ்ட் சாதனைகள் யாராலும் தொட முடியாத ஒன்றாகவே இருக்கும். டிராவிட்டின் குணங்கள் இன்றைய வீரர்களுக்கு ஒரு பாடம் என்பதில் சந்தேகமே இல்லை.

 
For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
Dravid Birthday Special - Here are the list of Unbeaten records of Rahul Dravid.
Story first published: Friday, January 11, 2019, 13:12 [IST]
Other articles published on Jan 11, 2019
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more