Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா இல்லை என்றால், இந்திய அணி கதி அவ்வளவு தான்.. உலக கோப்பையே அவரால் கிடைத்தது- சபா கரீம் கருத்து

மும்பை: ஜஸ்பிரித் பும்ரா இல்லையெனில் இந்திய அணி பலவீனமடையும் என முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் சபா கரீம்,கருத்து தெரிவித்தார். அஹமதாபாத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்து இந்தியா கோப்பையை வென்றது. 255 ரன்கள் இலக்கை பாதுகாத்த சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி, நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இப்போட்டியில் பும்ரா, தனது நான்கு ஓவரில் வெறும் 15 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இது குறித்து பேசிய சபா கரீம், "இந்திய அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா ஒருநாள் கூட சரியாகச் செயல்படாமல் இருக்க முடியாது. அவர் சரியாக விளையாடவில்லை எனில், இந்தியாவின் பலம் 40 முதல் 45% குறையும்."

"2024 உலகக்கோப்பையை வென்றபோதும், அவரது முக்கியமான ஓவர்களால்தான் வெற்றி பெற முடிந்தது; இல்லையெனில் இறுதிப்போட்டிக்கு நாங்கள் தகுதி பெற்றிருக்க மாட்டோம்," என்று குறிப்பிட்டார்.58 வயதான கரீம், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் வான்கடே மைதானத்தில் பும்ராவின் பந்துவீச்சையும் பாராட்டினார். இந்தியா 253 ரன்கள் குவித்து 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அரையிறுதி போட்டியில், அவர் நான்கு ஓவரில் 33 ரன்கள் மட்டும் கொடுத்து ஹாரி புரூக்கின் விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்த உலகக்கோப்பைத் தொடரில், பும்ரா வருண் சக்ரவர்த்தியுடன் இணைந்து அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். எட்டு போட்டிகளில் விளையாடி 12.42 சராசரியிலும், 12.00 ஸ்ட்ரைக் ரேட்டிலும், 6.21 எகானமியிலும் மொத்தம் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.இறுதிப்போட்டியில் அவர் வீசிய 24 பந்துகளில் 21 பந்துகள் 128 கி.மீ. வேகத்திற்கும் குறைவாகவே இருந்தன. இந்த மெதுவான பந்துகளிலேயே அவர் 11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

“பும்ரா மெதுவான பந்துகளை வீசினாலும், பேட்ஸ்மேன்களால் அவருக்கு எதிராக எளிதாக ரன்கள் எடுக்க முடிவதில்லை. இது ஒரு அசாதாரண திறமை. எந்தவொரு பேட்ஸ்மேனாலும் அவரை சரியாக கணித்து விளையாட முடியாது. ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஒரு பந்துவீச்சாளர் இந்திய அணிக்கு கிடைத்திருப்பது ஒரு பெரிய வரமாகும்,” என்று கரீம் பெருமிதத்துடன் கூறினார். ஒட்டுமொத்தமாக, ஜஸ்பிரித் பும்ரா தனது 95 டி20 சர்வதேச போட்டிகளில் 18.08 சராசரியிலும், 16.6 ஸ்ட்ரைக் ரேட்டிலும், 6.51 எகானமி ரேட்டிலும் மொத்தம் 121 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Story first published: Wednesday, March 11, 2026, 7:15 [IST]
Other articles published on Mar 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+