Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹாட்ரிக் சிக்ஸ்.. 21 பந்தில் அரைசதம்.. நம்ம விஜய் சங்கரா இது.. கொல்கத்தா அணிக்கு 205 ரன்கள் இலக்கு!

அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றிபெற 205 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய விஜய் சங்கர் ஹாட்ரிக் சிக்சர் அடிக்க, 21 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியுள்ள போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது. இதில் காயம் காரணமாக குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கவில்லை. இதனால் குஜராத் அணியின் கேப்டனாக ரஷீத் கான் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ரஷீத் கான் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார்.

Due to the Heroic of Vijay Shankar, Gujarat Titans sets a target of 205 runs for KKR in 2023

இதனைத் தொடர்ந்து குஜராத் அணி சார்பாக சாஹா - சுப்மன் கில் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. இதில் நிதானமாக ஆடிய சாஹா 17 பந்தில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் தமிழக வீரர் சாய் சுதர்சன் - கில்லுடன் கூட்டணி சேர்ந்தார். இந்த கூட்டணி அவ்வப்போது ஒரு பவுண்டரிகளை விளாசி, குஜராத் அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதனால் 10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் சேர்த்தது.

தொடர்ந்து சுனில் நரைன் வீசிய பந்தில் சாய் சுதர்சன் சிக்சர் அடிக்க, பின்னர் வந்த சுப்மன் கில் அதே ஓவரில் சிக்சர் அடிக்க முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த அபினவ் மனோகர் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து அசத்தினார். ஆனால் சுயாஷ் சர்மா பந்துவீச்சில் அவர் 14 ரன்களில் போல்டாகி ஆட்டமிழந்தார். பின்னர் கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய விஜய் சங்கர் - சாய் சுதர்சன் கூட்டணி இணைந்தது. சிறப்பாக ஆடிய இந்த கூட்டணியால், குஜராத் அணி 15 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்தது.

சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 34 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். இதன்பின்னர் அதிரடியாக சிக்சர் அடிக்க முயற்சித்த சாய் சுதர்சன் 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களத்திற்கு மில்லர் வர, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 19வது ஓவரை வீசிய ஃபெர்குசன் பந்துவீச்சில் விஜய் சங்கர் இரு சிக்சர்கள், இரு பவுண்டரிகள் விளாசினார். தொடர்ந்து கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்கள் விளாசிய விஜய் சங்கர் அதிர்ச்சி கொடுத்தார். இதன் மூலம் 21 பந்துகளில் அரைசதம் கடந்தார். இறுதியாக 20 ஓவர்களில் குஜராத் அணி 204 ரன்கள் குவித்தது.

Story first published: Sunday, April 9, 2023, 17:27 [IST]
Other articles published on Apr 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+