Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 சீனியர்களுக்கு இடமில்லை.. ரிங்கு சிங் பெயரும் இல்லை.. கம்பீர் இருந்தும் இப்படி நடக்கிறது

மும்பை: அடுத்து வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது இந்திய அணி. அதற்கு முன்னதாக இந்திய அணியில் இடம் பெற உள்ள டெஸ்ட் அணி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் துலீப் டிராபி என்ற உள்ளூர் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதில் நான்கு அணிகள் பங்கேற்க உள்ளன.

அந்த நான்கு அணிகளிலும் டெஸ்ட் அணியில் இடம் பெற சாத்தியமுள்ள பல்வேறு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆனால், அதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்திய அணியின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்களான அஜின்க்யா ரஹானே, மற்றும் புஜாராவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர்களை கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு குழுவினர் தேர்வு செய்வதில்லை.

Duleep trophy india ajinkya rahane


தற்போது உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் கூட அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் ரிங்கு சிங் சிறப்பாக ஆடி இருக்கிறார். அவரது உள்ளூர் போட்டி டெஸ்ட் பேட்டிங் சராசரி 54க்கும் மேல் உள்ளது. ஆனால், அவரும் திலீப் ட்ராபி தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை.

இது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாஸித் அலி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். "நான் துலீப் ட்ராபிக்கான அணிகளை பார்த்தேன். அதில் முக்கியமான மூன்று அல்லது நான்கு வீரர்கள் பெயர்கள் இடம் வரவில்லை. அஜிங்கியா ரஹானே அதில் இல்லை. புஜாரா அதில் இல்லை. சஞ்சு சாம்சன் அதில் இல்லை. ரிங்கு சிங் அதில் இல்லை. சிவம் துபேவை தேர்வு செய்து இருக்கிறார்கள். அவர் ஒரு ஆல் ரவுண்டராக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க தயாராகி விட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள் போல." என்று கூறி இருக்கிறார். பாஸித் அலி.

ஐபிஎல் தொடரில் ட்விஸ்ட்.. இனிமே 74 போட்டிகள் கிடையாது.. புது திட்டத்துடன் களமிறங்கும் பிசிசிஐ!


மேலும், "ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில் புஜாரா இந்திய அணிக்கு சிறப்பாக ஆடக் கூடியவர். கவுதம் கம்பீர் இருந்தும் அவருக்கு உள்ளூர் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காதது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. அதேபோல கவுதம் கம்பீர் இருந்தும் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்காதது எனக்கு ஆச்சரியமாக உள்ளது." என்றார் பாஸித் அலி.

Story first published: Friday, August 16, 2024, 19:23 [IST]
Other articles published on Aug 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+