For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எல்லா டீமுக்கும் நாங்க தான் சிம்ம சொப்பனம்… மே.இ தீவுகள் முன்னாள் வீரர் பிராவோ ஓப்பன் டாக்

எல்லா டீமுக்கும் நாங்க தான் சிம்ம சொப்பனம்... மே.இ தீவுகள் முன்னாள் வீரர் பிராவோ ஓப்பன் டாக்

துபாய்:உலகக்கோப்பை தொடரில் அனைத்து எதிரணிகளையும் மேற்கிந்திய தீவுகள் அச்சுறுத்தும் என்று டுவெயின் பிராவோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் மே 30ம் தேதி தொடங்கும் உலககோப்பையை இங்கிலாந்து, இந்தியா போன்ற அணிகள் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. ஆனால் கடந்த வாரம் முடிவடைந்த மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் தொடருக்கு பின்னர் நிலைமையே மாறிவிட்டதாக தெரிகிறது.

அந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2க்கு 2 என சமநிலையில் முடிந்தது. தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

Read This Also | இத்தாலி கால்பந்து தொடர்... நபோலியை வீழ்த்திய யுவண்டஸ்.. கோப்பையை வெல்ல வாய்ப்பு

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

குறிப்பாக நீண்ட இடைவெளிக்குப்பின் அணிக்கு திரும்பிய கிறிஸ் கெய்ல் இரண்டு சதங்கள், இரண்டு அரைசதங்கள் விளாசினார். கடைசி ஒருநாள் போட்டியில் தாமஸ் சிறப்பாக பந்து வீச இங்கிலாந்து 113 ரன்னில் சுருண்டது.

அணிகளுக்கு அச்சுறுத்தல்

அணிகளுக்கு அச்சுறுத்தல்

மேற்கிந்திய தீவுகள் அணியின் இந்த காட்டடி ஆட்டம் இன்றும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலககோப்பையில் அனைத்து அணிகளுக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி தான் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று டுவெயின் பிராவோ தெரிவித்துள்ளார்.

இளம்வீரர்கள் உள்ளனர்

இளம்வீரர்கள் உள்ளனர்

இதுகுறித்து வெயின் பிராவோ கூறுகையில் , எங்களது அணியில் சிறந்த இளம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் ஆட்டத்திறனில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

வீரர்களுடன் பேசினேன்

வீரர்களுடன் பேசினேன்

நம்பர் 1 அணியான இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியதை பார்க்கும்போது சிறப்பாக இருந்தது. கேப்டன் ஹோல்டர், மற்ற வீரர்களிடமும் நான் பேசினேன். இந்த அணி உலக கோப்பையில் அனைத்து அணிகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும். யாராக இருந்தாலும் அவர்களுக்குரிய நாட்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்றார்.

Story first published: Monday, March 4, 2019, 19:05 [IST]
Other articles published on Mar 4, 2019
English summary
Dwayne Bravo, former West Indies all-rounder, is impressed with his team's recent performance against England and believes that they will pose a threat to all the teams in the Cricket World Cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X