Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியர்களிடமே சீண்டல்.. சிக்கிய இங்கிலாந்து சீனியர் வீரர்கள்.. சஸ்பெண்ட்-க்கு ஆட்கள் ரெடி!

இங்கிலாந்து: ஒல்லி ராபின்சன் பிரச்னையே முடியாத சூழலில் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர்களும் சஸ்பெண்ட் செய்ய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

கிரிக்கெட் உலகில் கடந்த சில தினங்களாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி நடவடிக்கைகள் குறித்த பேச்சுக்கள் தான் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

இதற்கு காரணம், அந்நாட்டு வீரர் ஒல்லி ராபின்சன் செய்த ட்வீட்களும், தவறுகளும் தான்.

இங்கிலாந்து நடவடிக்கை

இங்கிலாந்து நடவடிக்கை

இளம் வீரர் ஒல்லி ராபின்சன் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர், இனவெறியை தூண்டும் வகையில் ட்வீட்கள் போட்டதாக புகார்கள் உறுதியானது. இதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுவயதில் தெரியாமல் செய்த ஒரு தவறுக்கு தற்போது இப்படி கடுமையான தண்டனை கொடுப்பதா என முன்னாள் வீரர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

சிக்கும் சீனியர் வீரர்கள்

சிக்கும் சீனியர் வீரர்கள்

ஆனால் இங்கிலாந்து வாரியம், தங்களது வீரர்கள் மீது உள்ள பழைய புகார்களை நோண்ட தொடங்கியுள்ளது. அதில் தற்போது முன்னணி வீரர் ஜாஸ் பட்லர், இயான் மோர்கன் ஆகியோர் சிக்கியுள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு ஐபிஎல்-ன் போது இவர்கள் இருவரும் இந்தியர்களின் ஆங்கில அறிவை கிண்டல் செய்வது போன்று ட்வீட்களை போட்டிருந்தனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

நியூசிலாந்து முன்னாள் வீரர் பிரண்டன் மெக்குல்லம், 2018ம் ஆண்டு மே மாதம் பதிவிட்ட ட்வீட்டில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரை டேக் செய்து, "josbuttler Sir, you play very good Opening batting" என்று பதிவிட்டுள்ளார். சரிவர ஆங்கிலம் தெரியாத சில இந்திய ரசிகர்களை போன்று அவரின் ஆங்கில ட்வீட் இருந்தது.

சர்ச்சை ட்வீட்

சர்ச்சை ட்வீட்

இதற்கு பதிலளித்த, இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர், "Well done on double 100 much beauty batting your on fire sir. I always reply sir no.1 else like me like u என்று இந்திய ரசிகர்களின் ஆங்கிலத்தை கிண்டல் செய்து ட்வீட் செய்திருந்தார். இந்த பேச்சுவார்த்தையில் இங்கிலாந்து வீரர் இயன் மோர்கனும் இணைந்தார். மெக்கலம்மின் ட்வீட்டிற்கு ரிப்ளை செய்திருந்த அவர், "Sir you're my favourite batsman" என்று பதிவிட்டிருந்தார். இவர்களின் ட்வீட்கள் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

விசாரணை தொடங்கியது

விசாரணை தொடங்கியது

ஒல்லி ராபின்சனை தொடர்ந்து ஒவ்வொரு வீரரின் சமூக வலைதள பக்கங்களையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆராய தொடங்கியுள்ளது. அந்தவகையில் இந்தியர்களின் மொழி அறிவை கிண்டல் செய்யும் விதமாக ட்வீட் போட்ட சீனியர் வீரர்கள் ஜாஸ் பட்லர் மற்றும் இயான் மோர்கன் ஆகியோர் மீதான விசாரணை தொடங்கியுள்ளது. அவர்களும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்களா என்பது விரைவில் தெரியவரும்.

Story first published: Wednesday, June 9, 2021, 13:51 [IST]
Other articles published on Jun 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+