For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட்டில் மட்டுமல்ல அரசியலிலும் முதல் பந்திலே சிக்சர்.. 5 முறை எம்பியை தோற்கடித்த யூசுப் பதான்

கொல்கத்தா : இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர்களின் ஒருவராக விளங்கிய யூசுப் பதான் தற்போது அரசியல் உலகில் மிகப்பெரிய சம்பவம் ஒன்றை செய்திருக்கிறார். 41 வயதான யூஸ் பதான் இர்பான் பதானின் சகோதரர் ஆவார். இர்பான் பதான் போல் யூசுப் பதானும் ஒரு அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் சுழற் பந்துவீச்சாளர் ஆவார்.

இதுவரை இந்திய அணிக்காக 57 ஒருநாள் போட்டிகள், 22 சர்வதேச டி20 போட்டிகளில் யூசுப் பதான் விளையாடி இருக்கிறார். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இதுவரை ஒரு டி20 உலக கோப்பை தான் வென்றிருக்கிறார்கள்.

lok sabha election bcci yusuf pathan jay shah india national cricket team rohit sharma virat kohli 2024

ஆனால் யூசுப் தான் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையையும் 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையும் வென்றிருக்கிறார். யூசுப் பதான் களமிறங்கினாலே முதல் பந்தில் இருந்து சிக்சர் அடிக்கக்கூடிய பழக்கத்தை உடையவர். இந்த நிலையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற யூசுப் பதான், திடீரென்று அரசியல் களத்தில் குதித்தார்.

அதுவும் குஜராத்தை சேர்ந்த யூசுப் பதான், மேற்கு வங்கத்தில் திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களமிறங்கினார். அதுவும் அவர் இறங்கிய தொகுதி சாதாரணமானது கிடையாது. மேற்கு வங்கத்தில் காங்கிரசின் கோட்டையாக இருந்த பகார்மர் என்ற தொகுதியில் தான் வேட்பாளராக யூசுஃப் தான் களம் இறங்கினார்.

அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிர் ரஞ்சன் சவுத்ரி என்பவர் ஐந்து முறை எம்பியாக விளங்கி இருக்கிறார். அந்த தொகுதியில் இஸ்லாமியர்களின் ஓட்டு அதிகம் இருந்த நிலையில் மம்தா பானர்ஜி யூசுப் பதானை அந்த தொகுதியில் இறக்கினார். யூசுப் பதான் குஜராத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு ஓட்டுகள் கிடைக்காது என முதலில் கணிக்கப்பட்டது.

ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் சிறப்பாக செயல்பட்ட யூசுப் பதான் தன்னுடைய பிரபலத்தை சரியான முறையில் பயன்படுத்தி வெற்றியை பெற்றிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கே கே ஆர் அணிக்காக யூசுப் பதான் விளையாடியது மேற்கு வங்கத்தில் அவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் உண்டு செய்கின்றது. தாம் எதிர்கொண்ட முதல் நாடாளுமன்றத் தேர்தலில் அதுவும் மிகப் பெரிய ஒரு அரசியல்வாதியை எதிர்த்து யூசுப் பதான் வெற்றி கண்டிருப்பது அவரது ரகசியங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Story first published: Tuesday, June 4, 2024, 23:14 [IST]
Other articles published on Jun 4, 2024
English summary
Election results 2024 - Cricketer Yusuf Pathan turned Giant killer in west bengal கிரிக்கெட்டில் மட்டுமல்ல அரசியலிலும் முதல் பந்திலே சிக்சர்.. 5 முறை எம்பியை தோற்கடித்த யூசுப் பதான்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+