Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'தேங்க்ஸ்' ரசிகர்களே உங்களது 'தேங்ஸுக்கு'.. சச்சின் நெகிழ்ச்சி!

மும்பை: தன்னை வாழ்த்தியும், 24 வருடமாக தங்களை மகிழ்வித்ததற்கு நன்றி சொல்லியும், வாழ்த்துகளைக் குவித்து விட்ட ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

ஓய்வுக்கு இன்னு்ம் நான்கு நாட்களே உள்ள நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு இதயத்தின் அடி ஆழத்திலிருந்து நன்றி சொல்வதாக சச்சின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டிவிட்டர் மூலம் நன்றி கூறியுள்ளார்.

நெகிழ்ந்து விட்டேன்

நெகிழ்ந்து விட்டேன்

என்னை வாழ்த்தியும், நன்றி கூறியும் கருத்து தெரிவித்த ரசிகர்களின் அன்பு என்னை நெகிழ வைத்துள்ளது. கடந்த 24 வருடமாக என்னை ஆதரித்த உங்களுக்கு நன்றி.

ஊக்கம் கொடுத்த ஆதரவு

ஊக்கம் கொடுத்த ஆதரவு

உங்களது ஆதரவு என்னை இத்தனை காலமாக சிறப்பாக விளையாடுவதற்கு எனக்கு நல்ல ஊக்கமாக இருந்தது என்று அந்த நன்றிச் செய்தியில் தெரிவித்துள்ளார் சச்சின்.

இதயத்தின் அடி ஆழத்திலிருந்து

இதயத்தின் அடி ஆழத்திலிருந்து

இன்னொரு செய்தியில், 24 வருடமாக எனக்கு ஆதரவு அளித்த உங்களுக்கு என்னுடைய இதயத்தின் அடி ஆழத்திலிருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று சச்சின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

200 டெஸ்ட் கொண்ட முதல் வீரர்

200 டெஸ்ட் கொண்ட முதல் வீரர்

136 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 200 டெஸ்ட் போட்டிகளை ஆடிய முதல் வீரர் சச்சின்தான் என்பது நினைவிருக்கலாம். அதேபோல அதிக போட்டிகள், அதிக ரன்கள், அதிக சதங்கள் என பல சாதனைகளையும் சச்சினே வைத்துள்ளார்.

நாளையுடன் 24 ஆண்டுகள் நிறைவு

நாளையுடன் 24 ஆண்டுகள் நிறைவு

சச்சின் 1989ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி பாகிஸ்தானுடன் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். நாளையுடன் அவர் டெஸ்ட் கிரி்ககெட்டில் 24 ஆண்டுகளைப் பூர்த்தி செய்து இன்னொரு சாதனையையும் படைக்கிறார்.

Story first published: Thursday, November 14, 2013, 13:24 [IST]
Other articles published on Nov 14, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+