Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேட்டிங், பவுலிங் என அட்டகாசம்....கடும் பிரஷரால் திணறிய இங்கிலாந்து... டி20 தொடரை வென்றது இந்தியா

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணி அட்டகாசமான ஆட்டத்தால் ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் இறுதி டி20 போட்டி அகமதாபாத்தில் தொடங்கி நடைபெற்றது.

இதில் பேட்டிங், பவுலிங் என அனைத்து துறையிலும் அதிரடி காட்டிய இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியுள்ளது.

5வது டி20 போட்டி

5வது டி20 போட்டி

5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2 - 2 என சமநிலையில் உள்ளது. வெற்றியை தீர்மானிக்கும் 5வது டி20 இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய அணியில் கே.எல்.ராகுல் நீக்கப்பட்டார். அதே போல் பந்துவீச்சில் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா - விராட் கோலி களமிறங்கினர்.

ஹிட் மேன்

ஹிட் மேன்

ஆட்டத்தின் முதல் ஓவர் முதலே ரோகித்தும், விராட் கோலியும் பந்துகளை சிதறவிட்டனர். அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 34 பந்துகளில் 64 ரன்களை விளாசி ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் அவுட்டானார். இதில் 4 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும். இதனையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ரோகித் விட்ட இடத்தில் இருந்து அதே அதிரடியை தொடர்ந்தார். 17 பந்துகளில் 32 ரன்களை அவர் விளாசிய போது ஒற்றை கையில் கேட்ச் பிடித்து ஜோர்டன் அவுட்டாக்கினார்.

கேப்டன் கோலி

கேப்டன் கோலி

மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த விராட் கோலி 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சர்வதேச டி20 போட்டிகளில் அவர் அடிக்கும் 28வது அரை சதம் இதுவாகும். அதே போல டி20 போட்டிகளில் கேப்டனாக அதிக அரை சதம் அடித்தவர்கள் பட்டியலில் 12 அரை சதத்துடன் முதல் இடம் பிடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ஹர்த்திக் பாண்டியா 39 ரன்களை விளாசினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை எடுத்தது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இதனையடுத்து 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜேசன் ராய் ஆட்டத்தின் 2வது பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த பட்லர் - டேவிட் மாலன் ஜோடி இங்கிலாந்து அணியை மீட்டு சென்றனர். இந்திய அணி பந்துவீச்சை துவம்சம் செய்த அவர்கள் 130 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தினர். இதனால் உடனடியாக புவனேஷ் குமாரை பந்துவீச அழைத்த கோலி பட்லரை 52 ரன்களுக்கு வெளியேற்றினார்.

சரிந்த இங்கிலாந்து

சரிந்த இங்கிலாந்து

இதனையடுத்து களமிறங்கிய பேர்ஸ்டோ (7), கேப்டன் மோர்கன் ( 1 ), பென் ஸ்டோக்ஸ் ( 14) , ஜோர்ட்ன் ( 11), ஆர்ச்சர் ( 1) ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 3 -1 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. இப்போட்டியில் இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டும், புவேனேஷ்குமார் 2 விக்கெட்டும் ஹர்த்திக் பாண்டியா மற்றும் நடராஜன் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

Story first published: Saturday, March 20, 2021, 23:18 [IST]
Other articles published on Mar 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+