
ஒருநாள் தொடர்
கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து இருக்கும் நிலையில் நடக்கும் முதல் ஒருநாள் தொடர் இங்கிலாந்து - அயர்லாந்து மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்தான். இந்த தொடரின் முதல் போட்டி புதன் அன்று நடைபெற்றது.

அயர்லாந்து தடுமாற்றம்
இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அயர்லாந்து அணி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் மோசமாக தடுமாறியது. குறிப்பாக டேவிட் வில்லியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது அயர்லாந்து.

விக்கெட் வீழ்ச்சி
6.3 ஓவர்களில் 28 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது அயர்லாந்து. டேவிட் வில்லி வேகத்தில் ஸ்டிர்லிங், கேரத் டெலானி, ஆன்டி பில்பிர்னி, லோர்கான் டக்கர் வரிசையாக ஆட்டமிழந்தனர். ஹேரி டெக்டார் சகிப் மஹ்மூத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அறிமுக வீரர்
மூத்த வீரர் கெவின் ஓ பிரையன் 22 ரன்கள் மட்டுமே எடுத்து அதில் ரஷித் பந்துவீச்சில் வெளியேறினார். சிமி சிங் டக் அவுட் ஆனார். அயர்லாந்து அணி 79 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து பரிதாபமாக காட்சி அளித்தது. அப்போது அறிமுக வீரர் கர்ட்டிஸ் கேம்பர் மட்டுமே நம்பிக்கை அளித்தார்.

கர்ட்டிஸ் கேம்பர் அரைசதம்
கர்ட்டிஸ் கேம்பர் சிறப்பாக ஆடி 118 பந்துகளில் நிதானமாக 59 ரன்கள் சேர்த்தார். அவருக்கு ஆன்டி மெக்பிரையன் ஒத்துழைப்பு அளித்து 40 ரன்கள் குவித்தார். அயர்லாந்து அணி 44.4 ஓவர்களில் 172 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. டேவிட் வில்லி 5 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.

இங்கிலாந்து விக்கெட் இழப்பு
173 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி சேஸிங் செய்தது இங்கிலாந்து. துவக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ 2, ஜேசன் ராய் 24, ஜேம்ஸ் வின்ஸ் 25, டாம் பான்டன் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். 13.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 78 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.

அதிரடி ஜோடி
அப்போது ஜோடி சேர்ந்த சாம் பில்லிங்க்ஸ் - கேப்டன் இயான் மார்கன் அதிரடி ஆட்டம் ஆடினர். சாம் பில்லிங்க்ஸ் 54 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். இயான் மார்கன் 36 ரன்கள் எடுத்தார். இவர்கள் அவர்கள் இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று அணியை வெற்றி பெற வைத்தனர்.

இங்கிலாந்து வெற்றி
இங்கிலாந்து அணி 27.5 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 விக்கெட் வீழ்த்தி அசத்தலாக ஆடிய டேவிட் வில்லி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். அடுத்த போட்டி ஆகஸ்ட் 1 அன்று நடைபெற உள்ளது.


Click it and Unblock the Notifications











